Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Children Stories

5.0  

anuradha nazeer

Children Stories

ஏழையின் கதை

ஏழையின் கதை

1 min
434


ஒரு கிராமத்தில் ஏழை குடும்பம் ஒன்று இருந்தது.

அந்த குடும்பத்திற்கு போதுமான வருவாய் இல்லை.

அவர்கள் மிகுந்த கவலையுடன் இறைவனை நினைத்துக் கொண்டே படுத்து உறங்கினர்.


மறுநாள் காலை அவர்கள் வீட்டு தோட்டத்தில் ஒரு பெரிய ஆப்பிள் மரம் தொங்கியது .

எங்கு நோக்கினும் ஆப்பிள் பழங்கள் காய்த்து காய்த்துத் தொங்கின.

கை எட்டும் அளவிற்கு.


சுலபமாக  பறித்து விட முடியும்விட முடியும் எவராலும்.

அங்கு நிறையக் குழந்தைகள்.

அழகழகான ஆப்பிள் பழங்களை யாரிடமும் சொல்லாமல் பறித்துச் சென்றனர். .குதூகலமாய்இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையின் மனைவிக்கு கடும்கோபம்.


இந்த ஏழைப் பிள்ளைகள் எல்லாம் பறித்துச் செல்கின்றனரே.

இதை நாம் சந்தையில் விலைக்கு விற்றால்  நமக்கு எக்கச்சக்க லாபம் வரும். விரைவில் நாம் அரண்மனை கட்டி விடலாமே என்று பேராசையால் நினைத்தாள்.


அதை தன் கணவனிடம் சொன்னா ள்.

 நான் இந்த குழந்தைகளை ஆப்பிள் பழங்களை பறிக்க அனுமதிக்கக் கூடாது என்று அவரும் சரி உன் இஷ்டம் என்று கூறிவிட்டார்.


அங்கு வரும் குழந்தைகளை பிடிப்பதற்காக அங்கு  வாழைப்பழத் தோல்களை போட்டனர். வேண்டுமென்றே.

கெடுவான் கேடு நினைப்பான் அல்லவா. 


கடவுள் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா? என்ன நடந்தது பாருங்களேன்.


அதனால் அன்று இரவு குழந்தைகளை பிடிப்பதற்காக கணவனும் மனைவியும் அந்த ஆப்பிள்  மரத்தின் அருகே

காத்திருந்தார்கள்.


காத்து காத்து பார்த்து கணவனோ தூங்கிவிட்டான்.

சிறுது நேரத்தில் ஏதோ சத்தம் கேட்டுஓடி வந்த கணவன் வாழைப்பழத் தோலில் வழுக்கி விழுந்து விட்டான் .

உடம்பு எல்லாம் பலத்த காயம்.


அப்போது அவன் மனைவியிடம் சொன்னா ன் .

இவ்வளவு அரிய பழங்களை கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார்.


சில பல  பழங்களை  குழந்தைகள் பறித்துச் சென்றால் என்ன?

அவர்களை பிடிக்கிறேன் என்று சொல்லி நம் உடம்பை காயப்படுத்தி கொண்டோமே இது நியாயமா ?என்று கேட்டான்.


அப்போது தான் அவளுக்கும் புத்தியில் உறைத்தது.

கடைசியில் கண்டது எல்லாமே கனவு. காலையில் என்னம்மா கனவா என்று கணவன் கையில் காபி கோப்பையுடன் சிரித்தவாறு நின்றான்.


Rate this content
Log in