ஆண் அழுகை..
ஆண் அழுகை..
1 min
20
இருட்டில் அழுத ஆண்களில் நானும் ஒருவன்..
தாழ்ப்பால் போட்ட அறையில் அழுத ஆண்களில் நானும் ஒருவன்..
தனிமையில் அழுத ஆண்களில் நானும் ஒருவன்..
சந்தோஷத்தில் அழுத ஆண்களில் நானும் ஒருவன்..
கண்ணீர் கண்களை விட்டு வெளியே வராமல் அழுத ஆண்களில் நானும் ஒருவன்..
மனைவி அழும் போது அழாமல் அவளுக்கு தெரியாமல் அழுத ஆண்களில் நானும் ஒருவன்..
சிவகண்டன் தங்கராசு..
