நீதி
நீதி


காட்டில் வரிக்குதிரை அப்பாவிற்கு பெரிய பிரச்னை. அவர் பிள்ளைகளால் அவருக்கு நிம்மதியே இல்லை. நான் இதை சிங்க மகாராசாவிடம் பஞ்சாயத்து செய்யப்போகிறேன் எனக் கிளம்பியது.
மகனில் ஒருவனோ, அப்பா உங்களுக்கு ஆறு மகன்கள்,எட்டு மகள்கள் எல்லோருக்கும் சம அளவு சொத்து பிரிப்பதுதான் முறை என்றது.
வாயை மூடு! எனக்குத் தெரியும். எந்த பிள்ளை வேலை செஞ்சுதோ அந்த பிள்ளைக்கு அதிகம் தரணும்…மகள்மட்டும் விதிவிலக்கா! வீடுன்னு இருந்தால் செலவும் அவளும் சரி செஞ்சுக்கணும்.
நாளை சிங்கராசா முடிவு சொல்வார். அங்கே எல்லோரும் வந்துடுங்க..எனச் சொல்லியபடி வரிக்குதிரை சென்றது.
மறுநாள் வரிக்குதிரை சிங்க ராசாவிடம் தனது கஷ்டத்தை சொல்லத் தொடங்கியது.
சிங்க ராசா முழுவதும் கேட்டபடி, உங்களை யார் அதிகம் அருகில் இருந்து கடைசிவரை பார்க்கிறார்களோ அவர்களுக்கு சொத்துகளில் ஒரு பங்கு அதிகம். மீதி வரவு,செலவு,லாபம்,நஷ்டம் இவற்றைக் கணக்கில் வைத்து செட்டில் செய்யுங்கள் மந்திரி எனக் கூறியபடி சிங்கம் அவையைக் கலையச் சொன்னது. வரிக்குதிரையின் அனைத்து பிள்ளைகளும் சிங்கராசாவின் கட்டளைப்படி நடக்க சம்மதித்தது.