கடவுளுக்கு கடிதம்
கடவுளுக்கு கடிதம்
அன்பான கடவுளுக்கு,
உங்களது பக்தன் எழுதுவது. இங்கு உலகில் புதிது புதிதாக பல நோய்கள் உருவாகுகின்றது. அதனால் பலரும் செத்து மடிகின்றனர். அனைத்து மருத்துவர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகின்றனர். ஆனால் அந்த நோயை எதிர்கொள்ள முடியாமல் சிரமப்படுகிறார்கள். மக்களை கட்டுப்பாட்டில் வைக்க அரசு மற்றும் பலரும் பல திட்டங்கள் போட்டும் அது பயன்படவில்லை. இதனால் பல நல்ல மனிதர்களும் இறக்கின்றனர். மனிதர்களுக்கு இறுதியாக செய்யும் அந்த இறுதிச் சடங்கைகூட செய்ய முடியாமல் பலர் கண்ணீர் விடுகின்றனர். பல குடும்பங்கள் இந்த நோயின் பாதிப்பால் துன்பப்படுகிறார்கள். சில குழந்தைகள் தங்களது தாயை இழந்து தவிக்கின்றனர். மருத்துவர்கள் அனைவரும் தங்களது சொந்த பந்தத்தை விட்டு விட்டு நோயாளிகளை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றுகின்றனர். எனவே, உலகில் வாழும் அனைத்து உயிர்களையும் காப்பாற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி 🙏
"உயிர்கள் அனைத்தயும் காப்பாற்று
என் எண்ணங்கள் அனைத்தயும் நிறைவேற்று "
