STORYMIRROR

Manobala P

Children Stories Drama Inspirational

4  

Manobala P

Children Stories Drama Inspirational

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

1 min
267

 உலகின் அனைத்து பகுதிகளிலும் இருக்கின்ற மாணவர்களைப் போல் இயல்பான ஒரு மாணவன் கல்வி பயின்று வந்தான். அவனுக்கு படிப்பில் ஆர்வம் அதிகம் இல்லை. ஆதலால் தேர்வுகளிலும் குறைவான மதிப்பெண் பெற்றான். குறைவான மதிப்பெண் பெற்றதால் அவன் பெற்றோர் கடுமையாக தீட்டினர் அடித்தனர். முதல் முறை வருந்தினான் பின்னர் அவனும் பலரைப் போல அதற்கு பலகிவிட்டான். 


இப்படியே சென்றுகொண்டிருந்த இவன் வாழ்க்கையில் ஒரு நாள் அவன் தொலைக்காட்சியில் செய்தி பார்த்து கொண்டிருந்த போது "அனைத்து ஆண்டைப் போன்றே இந்த ஆண்டும் பெண்களே மாவட்ட அளவில் முதல் இடம்" என்று கூறியதைக் கேட்டு அவனுக்கு ஒரு விதமான மற்றும் வித்தியாசமான சிந்தனை தோன்றியது. அனைத்து ஆண்டும் பெண்களால் மட்டும் தான் மதிப்பெண் அதிகம் பெற முடியுமா? ஆண்களால் முடியாதா? என்று அவனுக்குள் கேட்டுக்கொண்டான்.


அப்போது அவன் முடிவெடுத்தான் மாவட்ட அளவில் வரவில்லை என்றாலும் தன் பள்ளியில் ஆவது முதல் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று. இவ்வளவு நாட்கள் தன் தாய் தந்தையர் சொல்லி புரியாதது அன்று அவனே உணர்ந்து தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தனக்கு பிடித்த வாறு மாற்றி படிக்கத் தொடங்கினான். பின் கடின உழைப்பால் தான் எண்ணியதையும்

அடைந்து வாழ்க்கையிலும் சிறந்தவனாக மாறினான். அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கச்செய்தான். இதை எண்ணி அவன் பெற்றோரும் நெகிழ்ந்தனர். 


கருத்து: தான் எண்ணினால் இவ்வுலகில் எதையும் வென்று காட்டலாம் என்பதை உணர்த்தினான். 



Rate this content
Log in