வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை ..
வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை ..
தொடங்கும் ஒவ்வொரு வாழ்க்கையும் இருள் சூழ்ந்த கருவில் உருவாகி இருள் நிறைந்த கல்லறையில் தான் முடிகிறது....!!! எங்கே தொடங்கும் எவருக்கேனும் தெரியுமா எங்கே முடியும் யாருக்காவது தெரியுமா. அப்படி தெரிந்தால் தான் சுவாரஸ்யம் இருக்குமா வாழ்க்கையில்.
எப்படியோ ஈன்று மிகவும் போராடி தங்கள் குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்த்து வரும் வேளையில் அந்த குழந்தைகள் வண்ணமயமாய் வாழ வேண்டிய வயதில் துரதிர்ஷ்டவசமாக சில பல பழக்கத்திற்க்கு அல்லது காதல் வலையில் வீழ்ந்து வேதனைப்பட்டு மீள முடியாமல் அவதிப்படுவது கண்டு மனம் நொந்து வாடும் பெற்றோர்கள் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போகிறது.
கண்களை படைத்தது வண்ணங்களை பார்த்து ரசிக்க தானே தவிர இருளோடு இருளாக இருப்பதற்கு இல்லை. "உன் வாழ்க்கை உன் கையில்" இதை எப்போதும் மனதில் நிறுத்தி, வேதனையில் இருந்து வெளியே வர வேண்டும். ஒரு முறை பெற்றோர்கள் கவலையை உணர்ந்து பாருங்கள்.
பருவ வயதில் சேர கூடாத சேர்க்கையினால் இந்த டீன் ஏஜ் பலரை தலைகீழாக புரட்டி போட்டு விடும். சிலர் புகைக்கு, சிலர் மதுவிற்கு, சிலர் மாதுவிற்கு, சிலர் போதைக்கு அடிமையாகி வரும் நிலைமை சகஜமாகி விட்டது. மற்றும் சிலர் ஆண் பெண்ணின் ஈர்ப்பால், சில பெண் ஆணின் ஈர்ப்பால் காதல் கொண்டு அவர்களை பிரிய வைக்கும் (Breakup) சந்தர்ப்பம் வரை இழுத்து செல்லும்.
இந்த ஹோலி தினத்தின் வாயிலாக ஒரு வேண்டு கோல் டீன் ஏஜ் சிறுவர்களை பார்த்து, ஒரு முறை தங்கள் நிலை உணர்ந்து பாருங்கள். உங்கள் பெற்றோர்கள் படும் பாட்டை சற்று சிந்தித்து பாருங்கள். வண்ணமயமாய் வாழ வேண்டிய வயதில் ஏன் இருளாக்கி கொள்ள வேண்டும். முயன்றால் முடியாதது இல்லை. உங்கள் முயற்சிக்கு வானம் தான் எல்லை என்று எண்ணுங்கள்.
பிறப்பும் இறப்பும் நமது கையில் இல்லை. பிறகு ஏன் இடைப்பட்ட காலத்தில் நமது விருப்பம் என்று அலைய வேண்டும். வருவதை ஏற்று அதை எப்படி நடத்தி செல்வது என்று முடிவு எடுங்கள். பெற்றோர்களை மகிழ்ச்சி படுத்துங்கள் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்க கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்... பிறகு உங்கள் வாழ்க்கையில் வண்ணங்கள் தான்.....
