இரவு நேரத்து இறுக்கம்
இரவு நேரத்து இறுக்கம்


எல்லா உயிர்களும் ஏதோ ஒரு வித மன அழுத்தத்தில் அவ்வப்போது தள்ளப்படும். அது ஓர் அறிவு உயிரோ அல்லது ஆறு அறிவு உயிரோ. கண்டிப்பாக இதனை எதிர் நோக்கியே ஆக வேண்டும். அப்படி ஒரு சில வாழ்க்கையில் ஒரு மது பிரியனின் கதை இது. கொரோனா காலம் தொடங்கும் முன் இவர்கள் பெயர் குடிகாரர்கள் ஆனால் கொரோனா காலத்தில் இவர்களுக்கு கிடைத்த பட்ட பெயர் மது பிரியர்கள். நன்றி கொரோனா இவர்களை மது வெறியர்கள் என்று அழைக்காமல் மது பிரியர்கள் என்று சொன்னதற்கு.
ஒரு நல்ல மனிதன் அவன் பெயர் சுரேந்தர். அவன் தினமும் நண்பர்களுடன் மது கடைக்கு சென்று மது அருந்தி வீடு திரும்புவது வழக்கம். அவன் வாழ்க்கையில் ஒரு பெண் இது வரை கிடைக்காத காரணமே எப்போதும் மது அருந்த காரணம். கொரோனா காலம் வந்த உடன் எல்லாம் முடக்கம். பள்ளிகள், கடைகள், வண்டிகள், மக்கள் நடமாட்டம் எல்லாம் தடை. இது இருபத்தி ஐந்து வயதில் தொடங்கி இன்று முப்பத்தி ஐந்து வயது ஆகிறது இது வரை மணம் முடிக்க ஒரு பெண் கிடைக்காமல் தேடி தேடி அவன் மன இறுக்கத்தை மதுவில் கழிக்கிறான் இரவு நேரத்தில் நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்வதும் வாழ்க்கையை நகர்த்துவதும்.
கொரோனா முடக்கம் வந்த பின் அவன் வாழ்க்கையில் மதுவும் வாங்க முடியாது நண்பர்களுடன் செல்லவும் முடியாது இனம் புரியாத கவலை அவனுள். என்ன ஒரு சோதனை கட்டம் இவன் வாழ்வில் திருமணம் முடிக்க ஒரு பெண் கிடைக்க வில்லை. இன்றைய நாட்களில் மதுவும் இல்லை நண்பர்களும் இல்லை.
சுரேந்தரின் இரவு நேரத்து இறுக்கம் தீர மூன்றே வழிகள் தான். முதலில் கொரோனா மடிந்தே ஆக வேண்டும். இரண்டாவது ஒரு மங்கை திருமணம் செய்தால் போதும். மூன்றாவது எதிர்ப்பு மருந்து கண்டே ஆக வேண்டும்.