The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

anuradha nazeer

Others

4.7  

anuradha nazeer

Others

வாணிஶ்ரீயின் மகன் அபிநய்

வாணிஶ்ரீயின் மகன் அபிநய்

2 mins
2.8K


வாணிஶ்ரீயின் மகன் அபிநய் தற்கொலைக்குக் காரணம் என்ன... திருக்கழுக்குன்றத்தில் என்ன நடந்தது?


''மகன் அபிநய் வந்த பிறகு அவங்க ரெண்டு பேரும் தினமும் சாயங்கால நேரத்துல நாயைக் கூட்டிக்கிட்டு வாக்கிங் போவாங்க. முந்தாநாள்கூட அவங்க ரெண்டு பேரும் நல்லா சிரிச்சு பேசிக்கிட்டேதான் போனாங்க.''


சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர் எனப் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் வாணிஸ்ரீ. இவரின் மகன் அபிநய வெங்கடேஷ கார்த்திக் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்தார். இரு தினங்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தக் குடும்பத்தினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அபிநய் ஹார்ட் அட்டாக் காரணமாக இறந்தார் என அவரின் தந்தை கருணாகரன் வெளியில் சொல்லி வந்தாலும், தற்கொலை செய்து கொண்டதாகப் படங்கள் வெளியாகின.


ஆனூர் பகுதியில் உள்ள வாணிஸ்ரீ வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டைச் சுற்றி புதர் மண்டிக் கிடந்தது. "இது வாணிஸ்ரீ குடும்பத்தோட பாரம்பர்ய வீடு. அவங்க சினிமாவுல நடிக்கப் போனதும் குடும்பத்தோட சென்னைக்கு போயிட்டாங்க. ரொம்ப வருஷமாவே இந்த வீடு பூட்டியேதான் இருந்தது. இங்க இருக்க யாரும் அந்த வீட்டுக்குப் போகமாட்டாங்க. அதனால இந்த வீட்டை `பேய் பங்களா’னுதான் ஊருல சொல்வாங்க. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த வீட்டை சுத்தம் செஞ்சு பெயின்ட் அடிச்சாங்க. அப்போதிலிருந்து வாணிஸ்ரீயோட கணவர் கருணாகரன் மட்டும்தான் இங்கே தங்கி இருக்கார். அவர் டாக்டர்ங்கிறதால இந்த ஊர்ல கிளினிக் ஆரம்பிக்கப்போறதா சொல்லிக்கிட்டிருந்தார். இங்க சிலருக்கு மருத்துவமும் பார்ப்பார். அவரே சமையல் வேலைகளெல்லாம் செஞ்சிக்குவார்.



பக்கத்துல இருக்க கோயிலுக்கு அடிக்கடி போய்ட்டு வருவார். வேலைக்கு ஆள் தேவைப்படாததால் அந்த வீட்டுக்கு யாரும் போகமாட்டாங்க. வாணிஸ்ரீயும் அவரோட மகளும் எப்போதாவது ஒருமுறை வந்துட்டுப் போவாங்க. அவங்களும் அக்கம் பக்கம் யார்கிட்டயும் பேசமாட்டாங்க. வீட்ல ரெண்டு நாய்களை கருணாகரன் வளர்க்குறார். மகன் அபிநய் வந்த பிறகு அவங்க ரெண்டு பேரும் தினமும் சாயங்கால நேரத்துல நாயைக் கூட்டிக்கிட்டு வெளிய வாக்கிங் போவாங்க. முந்தாநாள்கூட அவங்க ரெண்டு பேரும் நல்லா சிரிச்சு பேசிக்கிட்டேதான் போனாங்க. என்ன நடந்துதுன்னு தெரியல. திடீர்னு இப்படி ஒரு சம்பவம் அந்த வீட்ல நடந்திருக்கு“ என்றார்கள்.





` "கடந்த 15 வருஷமா அபிநய வெங்கடேஷ கார்த்திக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்திருக்கு. இதுக்காக அவர் சிகிச்சை எடுத்துக்கிட்டிருந்திருக்கார். மருந்துகளும் தொடர்ந்து சாப்பிட்டிருக்கார். கொரோனா காரணமா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது ஸ்பெஷல் பாஸ் மூலம் கடந்த 6-ம் தேதி ஆனூர் கிராமத்துக்கு வந்திருக்கார்.



சென்னை, போரூரில் இருக்க வீட்ல அவர் மனைவி, குழந்தைகள்லாம் இருக்காங்க. ஆனா, அங்கேபோனா தன்னால் குடும்பத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும்கிறதால இங்க வந்திருக்கார். 21-ம் தேதி இரவு 12 மணிவரை அபிநய் மது அருந்திவிட்டுப் படுக்கச் சென்றிருக்கிறார். வீட்டிற்குப் பின்புறமா இருக்க ஓட்டுத் தாழ்வார மேற்புறத்தில் உள்ள சாரத்தில், தான் அணிந்திருந்த வேட்டியைக் கொண்டே தூக்குப்போட்டிட்டிருக்கார்.



அதிகாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் அபிநய வெங்கடேஷை கருணாகரன் பார்த்திருக்கிறார். உடல் சூடாக இருக்கவே உடலைத் தரையில் இறக்கி இருக்கிறார். அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய கருணாகரன் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். மன அழுத்தம் காரணமாகக் கார்த்திக் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளதாகக் கருணாகரன் எங்களிடம் சொன்னார். கத்தியால் கைகளில் கீறிக்கொண்டு பல முறை தற்கொலைக்கு முயன்ற சம்பவங்களும் நடத்திருக்கின்றன” எனக் காவல்துறை வட்டாரத்தில் தகவல் சொன்னார்கள்.


Rate this content
Log in