வால் நட்சத்திரம்
வால் நட்சத்திரம்
ஒரு நாள் மாலை வேளையில் ராமு காட்டுப்பகுதியில் விறகு கட்டைகளை சேகரித்துக் கொண்டு இருந்தான்.
அப்போது விறகுக்கட்டைகளை சேகரிப்பதில் அவனுக்கு தாமதம் ஏற்பட்டது.
சூரியன் மறைந்தது, ஆந்தை அலறியது மற்றும் பூச்சிகள் சத்தமிடத் தொடங்கின.
ராமு விறகுகளை சேகரித்துக்கொண்டு புறப்பட்டான்.
அப்போது செல்லும் வழியில் ஆற்றுப்பாலத்தில் நடக்கும் போது தலைநிமிர்ந்து வானத்தை உற்றுநோக்கினான் வானம் மிகத்தெளிவாக நட்சத்திரங்களுடன் காட்சியளித்து.
நட்சத்திரங்கள் அனைத்தும் சிறிய வைரத்துகள்கள் போன்று காட்சியளித்தன.அதனை கண்டவதும் ராமுவிற்கு சிறுவயதில் தன் பாட்டியுடன் இருந்த நினைவுகள் வரத்தொடங்கின.
சிறுவயதில் ராமுவிற்கு அவன் பாட்டிதான் சோறு ஊட்டுவார்.
அப்போது ஒவ்வொருநாளும் சோறு ஊட்டும் போதும் அவனது பாட்டி வானத்தை காண்பித்து வானத்தில் உள்ள ஓவ்வொரு நட்சத்திரங்களையும் ஒன்றிணைத்து பல வகையான உருவங்களை காண்பிப்பார்.
அதனால் அவனும் நட்சத்திரங்களை ஓன்றிணைக்கத்தொடங்கினான்.அப்போது ஒன்று வானத்தில் நகருவதைப்பார்த்தான், அது ராமுவிற்கு வியப்பாக இருந்த
து.
அதை என்னவென்று தன் பாட்டியிடம் கேட்க, அதற்கு அவனது பாட்டி அது 'வால் நட்சத்திரம்' என்று பதிலளித்தார். அதன் பிறகு ஒருநாள் அவனது பாட்டி இறந்துவிட்டார்.பிறகு மீண்டும் அவன் பாலத்தில் நடக்க ஆரம்பித்தான்.
அப்போது வானத்தில் வால் நட்சத்திரம் மிகுந்த பிரகாசத்துடன் அவனை தாண்டி சென்று தரையில் விழுந்தது.
அதனை அவன் ஆர்வத்துடன் பார்க்க ஓடினான்.அது எரியும் கல்லாக இருந்தது.
அதனை இவ்வளவு அருகில் பார்க்கும்போது மனமகிழ்ந்தான்.
அதன் வெப்பம் தணிந்த பிறகு அதனை அவன் தன் கைகளில் எடுத்தான்.
அதனை அவன் தன் வீட்டிற்கு கொண்டு சென்று ஒரு பெட்டியினுள் வைத்து பாதுகாத்தான்.
பிறகு காலையில் எழுந்து அதனை பார்க்கும்போது மின்னுவது போன்று இருந்தது.அதனால் அதனை நன்கு சுத்தப்படுத்தினான்.
அப்போது பார்க்கும் போது தன் கண்களை அவனாலயே நம்பமுடியவில்லை.அது ஒரு பெரிய வைரம்.அதனால் ராமு மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்.
அதனை வைத்து அவன் தன் வறுமையை போக்கிக் கொண்டான்.ஏழை மக்களுக்கு உதவிபுரிந்தான்.