தீர்த்தம்
தீர்த்தம்


கோயில் தொழுதுவிட்டுத் திரும்பிவரும் முன் தீர்த்தம் வாங்க வேண்டும் என்றும் அதன்பின் பிரசாதம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவதுண்டு. தெய்வ அம்சத்தை மந்திர ஒலியுடன் அபிஷேகம் செய்தெடுத்த நீரே தீர்த்தமாக பக்தர்களுக்கு வழங்குவது. நம்பிக்கை மற்றும் சாஸ்திரத்தின் இரண்டு குணங்களும் அடங்கியதே தீர்த்தம்.
தேவ விக்கிரகத்தின் ஸ்பரிசத்தாலும் மந்திர ஒலிகளாலும் புனித மாக்க்பப்பட்ட பரிசுத்தம் முதலாவது குணம். துளசி முதலிய மூலிகைகளின் மருத்துவ குணங்களே இரண்டாவது. வலது கையின் ஐந்துவிரலும் மடங்கும் போது உண்டாகும் கைக்குழியில் தீர்த்தம் வாங்க வேண்டும் என்பது விதி.
கைக்குழியை அப்படியே உயர்த்தி பிடித்து கையில் உயர்ந்து காணப்படும் சந்திர மண்டலத்துக்கும் சுக்கிர மண்டலத்துக்கும் மத்தியிலுள்ள இடுக்கு வாயிலா
க தீர்த்தம் அருந்த வேண்டும். இவ்வாறு தீர்த்தம் அருந்துவதனால் நன்மைகள் பல என்பதை மேல்நாட்டு ஆராய்ச்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. தீர்த்தங்களில் சேர்க்கும் துளசி, குவளை, தாமரை, மந்தாரை, தெற்றி, மஞ்சள் என்பவையின் மருத்துவ குணங்கள் முக்கியமாக இரத்த ஓட்டம் உணர்வடைகின்றது. இரத்தத்திலுள்ள அசுத்தங்களை அகற்றி உடலை சுத்திகரிக்கின்றது. இந்து மத ஆசாரத்தில் தீர்த்தம் அருந்துவதின் அவசியத்தைப் பற்றி விளக்கமுண்டு.
பொதுவாக உதடுகளில் உமிழ் நீரில்லாவிட்டாலும் வாய்க்குள் உமிழ்நீர் இருக்கும். வாய்க்குள் நாவின் அசைவின் விளைவாக உதடுகளும் எச்சில் ஆக மாறும். அதனால் உதடுகள் வாய்க்குள் செலுத்திவிட்டு தீர்த்தம் அருந்த வேண்டும். இரு உதடுகளும் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். அருந்திய தீர்த்த ஜலத்தின் மிச்சமாக உள்ளங்கையிலிருப்பதை தலையிலும், முகத்திலும் உடலிலும் தெளிக்க வேண்டும். வாங்கிய தீர்த்தத்தில் ஒருதுளி கூட தரையில் விழச்செய்யலாகாது.