VIJAYA RAGAVAN S

Others

4  

VIJAYA RAGAVAN S

Others

ஸ்டோரி மிரரின் அறிவிப்பு

ஸ்டோரி மிரரின் அறிவிப்பு

2 mins
716


ஒரு மிதமான மாலைப்பொழுதில். ஜன்னலின் வழியே ஊடுருவி, மறையும் தருவாயில் உள்ள சூரியக்கதிர்களின் வெப்பத்தில். ஒரு இனிய துவக்கத்தை துவங்கு என்று என் மனது, வடகிழக்குக் காற்றில் அலைபாயயும் மரக்கிளையாய். மடிக்கணினியை திறந்து விரல் வைத்து என் அன்னை பழக்கிய என் தாய் மொழியில்...


வாசகர்களாகிய உங்களுக்கும், ஸ்டோரி மிரர் என்னும் அறிவுப்படைப்புக்கும் என் முதல் வணக்கம்...


ஒரு சிறிய முன்னோட்டம் என்னைப் பற்றி :


ஸ்டோரி மிரர் தளத்தில் உள்ள அணைத்து படைப்புகளையும் நான் படித்துவிட்டேன்!

ஸ்டோரி மிரரில் எழுதும் அத்தனை எழுத்தாளர்களும் எனக்கு நன்கு பரிட்சயம்! ஆச்சரியமாக உள்ளதா?


ஆம்,

நான் தான் ஸ்டோரி மிரர் செயலியின் தமிழ் மொழியிற்கான ஆசிரியர் மற்றும் தொகுப்பாளர். உங்கள் பதிவுகள் அனைத்தையும் வாசித்து அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவி செய்பவன்.


தமிழ் மொழியின் சிறப்புகளை சொல்லவா வேண்டும். நேசித்துக் கற்ற மொழி இன்று உங்களுடன் உரையாட, சிந்திக்க, மற்றும் மெருகேற்ற...


மொழிப் பற்றின் காரணமாய் தமிழ்நாடு என்று பெயர் வைத்தார்கள். மாநிலப் பற்றும் மொழிப் பற்றும் சேர்ந்தே வளரட்டும் என்று. கணினி மயமாக்கலுக்குப் பிறகு ஆங்கிலம் தான் எல்லாம் தமிழ் இருக்காது என்றார்கள் இன்று கணினியில் வளர்த்துக் கொண்டிருக்கிறோம் தமிழ் மொழியை.


கல்வி கரையில; கற்பவர் நாள் சில என்னும் நாலடியார் பாடலுக்கு ஏற்றவாறு. வாழும் குறுகிய காலத்தில் முடிந்த வரை கற்க வேண்டும்.


ஏது நேரம்? நில்லாமல் ஓடும் வாழ்க்கை சக்கரம், திரும்பி பார்ப்பதற்குள் மறைந்து விடும் உறவுகள், செல்வத்துடனே சேர்ந்து வரும் நோய் நொடிகள்...புதிருடன் ஒரு மரணம்...


எப்பொழுது படிப்பது? எதைப் படிப்பது? என்று திணறும் தருவாயில் கிடைத்தது கையடக்கத்தில் ஒரு செல்லிடப்பேசி, அதனுள் மறைமுகமாய்...


உலகமும், உலகைத் தாண்டியும்!.. கருத்துக்கள், பதிவுகள், எண்ணங்கள், வேறுபாடுகள், நல்லவை, தீயவை என நுண்ணுயிரிகள் போல் மொய்த்து கொண்டிருக்க... நம் எண்ணங்களின் தரத்தை உயர்த்த தரமான ஒரு இடம் கிடைக்காதா என்று தீவைத்தேடும் கப்பல் மாலுமி போல இருந்த போது..கிடைத்தது,


ஒரு சிறிய தமிழ் சமூகம் இந்த வலைப்பின்னலில்.


குழந்தைகளுக்கான அறிவுக்கதைகளும், இயற்கையை தீண்டும் கவிதைகளையும் பார்க்கும் போதும், படிக்கும் போதும்... தமிழ் சமூகத்தின் நிலை எக்காலத்திலும் அதன் தரம் சிதைந்துவிடாது என்பது உறுதியானது.


வாழ்க்கையின் அனுபவம் கொண்ட பெரியோர்கள் முதல் வாழ்கையில் முன்னேறிச் செல்ல துடிக்கும் இளைஞர்கள் வரை இருக்கும் இந்த தளத்தை நாம் அறிவுடனும், நேர்மறை சிந்தனையுடனும், ஒரு கிராமத்திற்கு கிடைத்த நூலகத்தைப் போல செழுமை படுத்துவோம்.


மேலும்

உங்கள் கருத்து, உங்கள் அன்பு, உங்கள் பாராட்டு, உங்கள் ஐயம், உங்கள் பின்னுட்டம், செயலி குறித்து உங்கள் புகார் என அனைத்தையும் என்னுடன் பகிர்ந்துகொள்ள, தெரிவிக்க என் மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள் தொடர்ந்து இணைந்திருப்போம்.


மின்னஞ்சல் முகவரி : ragavanvs2020@gmail.com


நன்றி


விஜயராகவன்.சே
Rate this content
Log in