VIJAYA RAGAVAN S

Others

2.7  

VIJAYA RAGAVAN S

Others

நான் எழுதும் கட்டுரைகள்

நான் எழுதும் கட்டுரைகள்

3 mins
1.0K


கட்டுரை - 1


வணக்கம் வாசகர்களே! அனைவரும் நலமா... நான் இங்கு நலம்.


என்.பி.ஆர் (NPR),

என்.ஆர்.சி (NRC),

என்.ஆர்.ஐ.சி (NRIC),

குடியுரிமை (CITIZENSHIP),

கலவரம் (PROTEST),

மாநில உரிமை (STATE AUTONOMY),

இணைய முடக்கம் (INTERNET SHUTDOWN),

மதச்சாற்பற்ற நாடு (SECULAR COUNTRY),

...


இந்த வார்த்தைகளை கேட்காமல் இந்தியர் ஒருவராலும் இந்த வாரத்தைக் கடந்து வந்திருக்க முடியாது. இதைப் பற்றி கொஞ்சம் பார்ப்போம் வரலாறு முக்கியம்.


மனித நாகரிக வரலாறு


மனிதன் தனியாகப் பிறக்கிறான். இவ்வுலகில் அவன் எங்கு வேண்டுமானாலும் நடமாட அவனுக்கு இயற்கை உரிமை உண்டு...இது ஒன்று போதுமே அவன் எங்கு வேண்டுமானாலும் வாழ்வதற்கு..


இந்த இடத்தில் தான் நாகரிகம் என்ற ஒன்று மனித பரிணாமக் கொள்கையில் முளைத்தது. அதனால் தனிமனிதனாக இருந்தவன் ஒரு குடும்பமாக வாழத்தொடங்கினான், பல குடும்பங்களை இணைத்து ஒரு சமுதாயமாக அவனுக்கென ஒரு மொழி, ஒரு பண்பாடு, ஒரு கலாச்சாரம் என்று ஏற்படுத்தி வாழ்ந்து வந்தான்.


காலங்கள் செல்ல செல்ல கண்டங்கள் நகர்ந்தன மனிதனும் நகர்ந்தான் ஒவ்வொரு கால நிலைக்கு ஏற்றார் போல் அவன் தன் வாழ்வை கட்டமைத்துக் கொண்டான்.


மக்கள் அனைவரும் உழைத்து அவர்களுக்கேற்ற உணவு, உடை, வாழ்விடத்தை ஏற்படுத்திக் கொண்டனர்.


நாடு என்னும் கருத்து


காலம் செல்ல செல்ல தங்களுக்குள் உள்ள திறமைசாலியை மக்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டனர். இந்த தலைவர்கள் காலப்போக்கில் தங்களை மன்னர் என்றும் தங்களின் நில எல்லைகளையும் பிரித்தும் கொண்டனர்.


இப்படி பல நிலங்கள் ஒன்று சேர்ந்து குறு தேசங்களாக உருமாறின, தன் தேசத்திற்குள் உள்ள மக்களைக் காப்பாற்ற போர்ப்படைகள் உருவாக்கப்பட்டன, அவற்றைப் பராமரிக்க மக்களிடம் வரி பெறும் முறையை செயல்படுத்தினர்.


பிறகு இப் போர்ப்படைகளைக் கொண்டு பிற நாடுகளைக் கையகப்படுத்தினர். பிறகு கடல் வழித்தடங்களை கண்டு உலகின் எந்த மூலையில் உள்ள நாடுகளில் இருந்தும் வளங்களை சுரண்டினர்.


இந்தியா உருவாக்கம்


ஆங்கிலேய ஆட்சியின் சுரண்டலுக்குப் பிறகு 552 குறுதேசங்களாக இருந்த மாகாணத்தையும் ஒன்றிணைத்து இந்தியா என்னும் நாடு ஒன்றை உருவாக்கினர். தனக்கென அரசியலமைப்புச் சட்டம் இயற்றி இறையாண்மைக் கொண்ட நாடக மாறியது இந்தியா.


இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியரா? இந்த கேள்வி இன்றல்ல நாடு சுதந்திரம் பெற்ற போதே எழுந்தது. இந்தியா, பாகிஸ்தான் என்று மத அடிப்படையில் இரண்டு நாடுகளாகப் பிரித்த போது மக்கள் அங்கும் இங்குமாய் குடியேறினர். யார் இந்தியர், யார் பாகிஸ்தானியர் என்று குழப்பம் ஏற்பட்டபோது. அதற்கு தீர்வாகத் தான் அரசியலமைப்பில் ஒரு பகுதியை சேர்த்தனர்.


குடியுரிமை பகுதி


26 ஜனவரி 1950, முன் இந்தியாவில் பிறந்தாலோ அல்லது ஐந்து வருடங்கள் இந்தியாவை வாழ்விடமாகக் கொண்டிருன்தாலோ அவர் இந்தியர் ஆவார்.


பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தலோ அல்லது பிரிவினையின் போது இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் சென்று பிறகு இந்தியாவே மேல் என்று திரும்ப வந்தவர்களுக்கும் குடியுரிமை கிடைத்தது.


கொத்தடிமைகளாக இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட மக்களுக்கும் அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஆறு மாத காலத்திற்குள் பதிவு செய்தால் இந்திய குடிமகனாக ஆகலாம் என்று எழுதப்பட்டது.


இதை உலக நாடுகள் சில இந்தியாவில் தான் குடியுரிமை மிக மலிவாக கிடைக்கிறது என்று கேலி செய்தன! மேலும் அரசியலமைப்பில் அந்தந்த காலத்துக்கேற்ப குடியுரிமை சட்டத்தை திருத்திக் கொள்ளலாம் என்று பாராளுமன்றத்துக்கு அதிகாரம் கொடுத்தது.


அதன் படி தான் இந்த குடியுரிமை திருத்தச் சட்டம்(2019) கொண்டு வரப்பட்டது.


குடியுரிமை சட்டத் திருத்தம் 2019


இந்தியாவில் உள்ள சட்டத்திற்குப் புறம்பான வகையில் குடியேறிய மக்கள் அகதிகளாகக் கருதப்படுவர். அவர் இந்திய குடிமக்களாக மாட்டார். ஆனால் 2019 குடியுரிமை சட்டத்தின் படி மதரீதியாக துன்புறுத்தப்பட்டு பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு

( ஹிந்து, சீக்கியர், பார்சி, பெளதம், கிறிஸ்துவம், ஜெயின்ஸ் ) குடியுரிமை வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.அதன் படி என்.பி.ஆர் , என். ஆர்.சி, என்.ஆர்.ஐ.சி. மேற்கொள்ளப்படும்(படலாம்).


என்.பி.ஆர் - NATIONAL POPULATION REGISTER


இது ஒரு பதிவேடு ஆகும். இதில் இந்தியர், இந்தியர் அல்லாதோர் ( குடியுரிமைக்காக இந்தியாவில் வாழுபவர் ) ஆகியோரின் பயோமெட்ரிக் தகவல்கள் அடங்கிய ஒரு பதிவு ஆகும். இதன் அடுத்த கட்டமாக இந்தியர் அனைவருக்கும் ஐ.டி அட்டை (ID CARD ) வழங்கப்படலாம்..


என்.ஆர்.சி - NATIONAL REGISTER OF CITIZENS


இதுவும் மக்களின் பயோமெட்ரிக் தகவல்கள் கொண்ட பதிவேடு தான் ஆனால் இதில் நாடு முழுவதும் குடியுரிமை பெற்ற மக்களின் தகவல்கள் மட்டுமே அடங்கும்.


என்.ஆர்.ஐ.சி - NATIONAL REGISTER OF INDIAN CITIZENS


என்.ஆர்.சி. யின் தகவல்களைக் கொண்டு இந்திய குடிமக்களின் பதிவேடு உருவாக்கப்படும். இந்தியாவில் வாழும் அணைத்து இந்தியரின் தகவலும் இதில் அடங்கும்.


குடியுரிமையை நிரூபித்துக்காட்ட :


26 ஜனவரி 1950 முதல் 1 ஜூலை 1987, வரை இந்தியாவில் பிறந்து வாழ்விடமாக கொண்டவர்க்கு பிறப்புச் சான்றிதழ் (BIRTH CERTIFICATE) மட்டுமே போதுமானது.


2 ஜூலை 1987 முதல் 02 டிசம்பர் 2004, வரை இந்தியாவில் பிறந்தவரின் பெற்றோர் யாரேனும் ஒருவர் (தாய் அல்லது தந்தை) கட்டாயம் இந்தியராக இருக்க வேண்டும் (பிறப்புச் சான்றிதழ் கொண்டு)


2 டிசம்பர் 2004 க்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்களுக்கு அவர்கள் பெற்றோர் இருவருமே கட்டாயமாக இந்தியர்களாக இருக்க வேண்டும் (பிறப்புச் சான்றிதழ் கொண்டு)


இதில் கடவுச்சீட்டு(PASSPORT) ஏற்றுக்கொள்ளப்படாது. பிறப்புச் சான்றிதழ் மட்டும் தான் முக்கியம்.


எவ்வாறு செயல்படும் :


உள்ளூரில் உள்ள ரிஜிஸ்தர் (LOCAL REGISTER) உங்கள் பிறப்பு அடையாளம் கொண்ட சான்றிதழை(BIRTH CERTIFICATE) சரி பார்ப்பார் அவருக்கு சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் மாவட்ட ரிஜிஸ்தர் (DISTRICT/TALUKA REGISTER) உங்களை விசாரிப்பார்.


பெரும்பாலும் குடியுரிமை பதிவேட்டில்(NRC) பெயர் சேர்க்கப்படும். இப்படி ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மக்களின் தகவல்களை பெற்றுக்கொள்ளும். அதனை அப்படியே மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிடும். 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட தகவலை ஒன்றிணைத்து NRIC (NATIONAL REGISTER OF INDIAN CITIZENS) உருவாக்கப்படும்.


அகதி மற்றும் உச்சநீதிமன்றம்


இந்தியர் என்று நிரூபிக்க எந்த ஒரு அடையாளமும் இல்லை என்றால் மட்டுமே அவர்கள் பெயர் பதிவேட்டிலிருந்து நீக்கப்படும். அகதியாக அறிவிப்பர்.


குடியுரிமை அமலாகச் சட்டம் 2019 வாயிலாக பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இஸ்லாமியர் அல்லாத மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.


இதற்கு நடுவில் உச்சநீதிமன்றம் இந்த குடியுரிமை சட்ட திருத்தம் 2019 இந்திய அரசியலமைப்பை மீறுகிறது என்று தெரிந்தால் இந்த சட்டத்தை அமல்படுத்த தடை விதித்து விடும்...


நண்பர்களே இந்த கட்டுரை தகவலுக்காக மட்டுமே. இதில் எந்த அரசியல் கலப்பும் இல்லை என்பதை தெள்ளத் தெளிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தெரிந்தவர்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள், தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் பின்னுட்டங்களை வரவேற்கிறேன்.


நன்றி


விஜயராகவன் சே



Rate this content
Log in