Vignesh M

Children Stories Inspirational

5.0  

Vignesh M

Children Stories Inspirational

ஓர் உயரிய மாற்றம்

ஓர் உயரிய மாற்றம்

2 mins
940


ஜாக்கி பரபரப்பாக இருந்தான்.அடுத்து வேதியல் வகுப்பு சார் இன்னும் வரவில்லை ஜாக்கி சுமாராக படிக்கும் மாணவன் தான்.அவன் படிக்கும் பள்ளி மிகவும் கட்டுக்கோப்பான ஆசிரியர்களுடன் நடந்துகொண்டிருந்தது.அதிலும் வேதியல் வகுப்பிற்கு வரும் ரமேஷ் வாத்தியார் மூங்கில் குச்சி உடையும் வரை அடிப்பார்…


குட்மார்னிங் சார்..கோரசாக மாணவர்கள் சாரை வரவேற்றனர்..


சிறிது நேரம் புத்தகத்தை திருப்பி கொண்டிருந்தார். அப்போது ஜாக்கி வேண்டாத தெய்வமே இல்லை.அந்த நேரத்தில் கீர்த்தனா,"நேத்து ஏதோ ஹோம்வொர்க் குடுத்தேன்ல" என்று கேட்டார்.எழுந்த நின்று பீரியாடிக் டேபில்ஸ் இரண்டு முறை வரஞ்சுட்டு வரசொன்னீங்க சார் என்றாள்..ஞாபகம் வந்தவராய் ..நேத்து ஹோம்ஒர்க் குடுத்தேன்ல முடிச்சுடீங்களா என்றார்..யெஸ் சார் என்றனர் மாணவர்கள்.சரி யாரெல்லாம் எழுதல என்றார்.ராம் மெல்ல எழுந்துரிக்க நான்கு பேர் மெல்ல எழுந்தனர்..சரி யாரெல்லாம் எழுதி வீட்டுலயே வெச்சுட்டு வந்துடீங்க அப்டி யாராரச்சும் இருக்கீங்களா என்றார்..ஜாக்கி மெல்ல எழுந்தான்..சாருக்கு கோபம் தலைக்கேறியது கீர்த்தனா போய் ஸ்டாப் ரூம்ல என் பெஞ்ச்க்கு கீழ ஒரு மூங்கில் குச்சி இருக்கும் போய் எடுத்துட்டுவா என்று கட்டளையிட்டார்..கீர்த்தனா வெளியே செல்ல.. டேய் வெளியே வாடா என்றார்..ஜாக்கி முனகிக்கொண்டே சென்றான்.. சார் எழுதிட்டேன் சார்..நாளைக்கு கொண்டுவந்துடறேன் சார்..என்று கெஞ்சினான்.கீர்த்தனா உள்ளே வந்தாள் "சார் குச்சி அங்க இல்ல சார்" என்றாள் வகுப்பே நிம்மதி மூச்சு விட்டது..அப்போது அங்கே தமிழ் ஐயா இராமலிங்கம் வந்தார்..ரமேஷிடம் இரண்டு நிமிடம் பேசினார் பிறகு சென்றுவிட்டார்.சிரித்துக்கொண்டே உள்ளே வந்த ரமேஷ் சார் ஜாக்கியைப் பார்த்தார் எழுதலனா எழுதலனு சொல்லனும்ல.. என்று காதை திருகிகொண்டே சொன்னார்..சார் எழுதிட்டேன் சார் என்றான்..நீ ஹாஸ்டல் தான கிளாஸ் முடிச்சு என்கூடவே வா என்று அனுப்பிவிட்டார்..ஏன்டா ஜாக்கி பொய் சொன்ன இப்போ என்னடா பண்ணப்போற என்றான் சிவநேசன்..டேய் அவருலாம் வர மாட்டாரு சும்மா சொல்றாருடா என்றான் சதீஷ்ராஜா..கிளாஸ் முடிந்தது.. டேய் வா நீ என்று கையோடு ஹாஸ்டலுக்கு தன் இருசக்கர வாகனத்தில் கூட்டிக்கொண்டு அவன் ரூமிற்கு சென்றார்..அங்கே அவன் கபோர்டில் அந்த நோட்டு இருந்தது அதை எடுத்து காண்பித்தான் ஜாக்கி. ரமேஷிற்கு என்னவோ போல இருந்தது..சார் நான் நல்லா படிக்க மாட்டேன் ஆனா உண்மையா இருப்பேன் சார் என்றான் ஜாக்கி.சாரிடா தம்பி போய் சாப்டு கிளாஸ்கு போப்பா என்றார்..இனி ரமேஷ் மாணவர்களின் நண்பனாக மாறினான்..அனைவருக்கும் பிடிக்கும்விதமாக இருந்தான்.. 


Rate this content
Log in