anuradha nazeer

Others

4.5  

anuradha nazeer

Others

நிறைவேறாத நீண்டநாள் ஆசை

நிறைவேறாத நீண்டநாள் ஆசை

2 mins
3.0K


நிறைவேறாத நீண்டநாள் ஆசை! தாத்தா இறந்த சில தினங்களில் விபரீத முடிவெடுத்த பேரன்


சென்னையில் தாத்தா இறந்த சில தினங்களில் அவரின் பேரன், தன்னுடைய நீண்ட கால ஆசை நிறைவேறாத விரக்தியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராமாபுரம், அண்ணாநகர், தாங்கள் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர், சென்னை மாநகராட்சி அண்ணாநகர் மண்டலம் 8-ல் வேலை பார்த்துவருகிறார். இவரின் மகன் யஷ்வந்த் (17). இவர், கடந்த 12.5.2020- பிற்பகலில் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ராயலா நகர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர். விசாரணையில் யஷ்வந்த் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்தது.

இதுகுறித்து ராயலா நகர் போலீஸார் கூறுகையில், ``கிண்டியில் உள்ள ஐடிஐ-யில் யஷ்வந்த் படித்துவந்தார். ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே அவர் இருந்துள்ளார். விலை உயர்ந்த குறிப்பிட்ட மாடல் டூவீலரை வாங்கித்தாருங்கள் என வீட்டில் யஷ்வந்த் அடிக்கடி கேட்டு சண்டை போட்டுவந்துள்ளார். அப்போது, உனக்கு 18 வயதான பிறகு பைக் வாங்கித் தருவதாக யஷ்வந்த் பெற்றோர் கூறிவந்துள்ளனர்.

தன்னுடைய நீண்ட நாள் பைக்கின் ஆசை நிறைவேறவில்லையே என்ற மனவேதனையில் யஷ்வந்த் இருந்துவந்துள்ளார். கடந்த 12-ம் தேதி மாடியில் உள்ள அறைக்குச் சென்று புடவையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வராததால் மாடிக்குச் சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கியதைப்பார்த்து யஷ்வந்த்தின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு யஷ்வந்த்தின் உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு யஷ்வந்த்தின் இறுதிச் சடங்கு நடந்தது" என்றனர்.

உடனடியாக கதவை உடைத்து உள்ளே சென்று அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு யஷ்வந்த்தின் உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு யஷ்வந்த்தின் இறுதிச் சடங்கு நடந்தது என்றனர்.

இதுதொடர்பாக யஷ்வந்த்தின் தந்தை பாஸ்கரன் கொடுத்த புகாரில், `எனக்கு இரண்டு மகன்கள். எனது மகன் யஷ்வந்த், புதிய பைக் வாங்கித்தரும்படி வெகுநாள்களாகக் கேட்டுவந்தான். நான் தற்போது வேண்டாம். இன்னும் சில நாள்களில் வாங்கித் தருவதாகக் கூறிவந்தேன். இந்தச் சமயத்தில் எனது தந்தை மணி, இறந்து சில தினங்களே ஆவதால் பைக் வாங்கித் தரவில்லை.

அதனால் மனவருத்தத்தில் இருந்த யஷ்வந்த், மாடி அறைக்குச் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளான். அவனின் சடலத்தை நல்லடக்கம் செய்ய பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு என்னிடம் ஒப்படைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனுஷ்கண்ணகி வழக்குப் பதிந்துள்ளார்.

விலை உயர்ந்த பைக் கிடைக்காத விரக்தியில் மாணவன், உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



Rate this content
Log in