மந்திர காலணிகள்
மந்திர காலணிகள்
ஒரு ஊர்ல ஒரு குடும்பம் இருந்துச்சு. அந்த குடும்பத்தில் அப்பா ரவி, அம்மா சுதா,அவர்களின் மகள் மலர்,மூவரும் வாழ்ந்து வந்தனர்.ஆனால் மலரால் நடக்க முடியாது. மலர் இரவில் கனவு காண்பாள்.அவள் கனவில் நடனம் ஆடுவது போலவும், ஆடி மகிழ்வது போலவும், கனவு காண்பாள்.காலை எழுந்து பார்க்கும் போது தான் அவளால் நடக்க முடியாது, என்ற நினைப்பே மலருக்கு வரும்.
மலர் எப்போதும் அம்மா சொல்வதை கேட்பார். செடிகளுக்கு நீர் ஊற்றுவாள், ஆசிரியர் கொடுத்த வீட்டுப் பாடங்களை சரியாக செய்து முடிப்பாள். வகுப்பில் அனைவருக்கும் உதவியாய் இருப்பாள். ஒரு நாள் வகுப்பில் ஜன்னல் வழியே விளையாடிக் கொண்டிருக்கும் மாணவர்களை பார்த்தாள். மற்ற மாணவர்களைப் போல் தன்னால் விளையாட முடியவில்லை என்று எண்ணிக் கொண்டாள்.
ஆசிரியர் நாளை நம் பள்ளியில் விளையாட்டுப் போட்டி என்று அனைத்து மாணவர் மாணவியரிடமும் கூறினார். பாலன் உடனே என்ன விளையாட்டு ஐயா என்று கேட்டான்?
ஆசிரியரோ ஓட்டப்பந்தயம் என்று கூறினார். அப்போது கார்த்திகா என்ற மாணவி நாங்கள் அனைவரும் ஓட முடியும் ஆனால் மலரால் ஓட முடியாது, என்று கூறினாள் . மலர் மனம் உடைந்து போனாள்.
வகுப்பறையின் மேசையில் சாய்ந்து வருத்தமாக மலர் இருந்தாள். அவளின் அருகில் ஒரு அடிபட்ட புறா குஞ்சு தஞ்சமடைந்தது. அதன் காயத்தை குணப்படுத்த முயற்சி செய்தாள்.
கொஞ்ச நேரம் கழித்து அந்த புறா மெது மெதுவாக பறக்க ஆரம்பித்தது.
அந்தப் புறா குஞ்சு மலருக்கு இரண்டு தங்க காலணிகளை பரிசாக அளித்தது. இது சாதாரண காலணி இல்லை, இது தங்க மந்திர காலணி, இதைப் போட்டுக் கொண்டால் உன்னால் நன்றாக நடக்க முடியும், என்று புறா கூறியது.
மலர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். தன் சந்தோஷத்தை தன் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேகமாக தங்க காலணிகளைை அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள். தன் பெற்றோரிடம் காட்டி மகிழ்ந்தாள்.
அடுத்த நாள் நடைபெற்ற ஓட்டப்பந்தய போட்டியில் முதல் பரிசு வாங்கினாள். மலர் நடந்து வருவதைக் கண்டு அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மலருக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தனர். மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தாள். மலரின் மகிழ்ச்சி கண்டு அவளின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
நீதி : பிறருக்கு நல்லது செய்தால் நமக்கும் நல்லதே நடக்கும்.
