STORYMIRROR

Kaviya boopathi

Children Stories Children

4  

Kaviya boopathi

Children Stories Children

இயற்கை ஆடை

இயற்கை ஆடை

1 min
390

ஒரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பம் இருந்தது. அந்த குடும்பத்தில் அப்பா பூபாலன்,அம்மா பரிமளா மற்றும் அவர்களின் மகள் தமிழரசி மூவரும் வாழ்ந்து வந்தனர்.

 அவர்கள் ஏழையான குடும்பமாக இருந்த போதும் தங்களின் மகள் தமிழரசியை எந்தவித குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டனர்.


ஒருநாள் மாலை தமிழரசி அவளின் நண்பர்களுடன் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள்.அப்போது அரசின் கட்டளை ஒன்றை முரசு மூலம் அறிவித்துக் கொண்டே வந்தனர்.அரண்மனையில் விருந்து ஒன்று நடக்க இருப்பதாகவும் அதில் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.இதனால் ஆனந்தம் அடைந்தவர்கள் விழாவிற்கு எந்த ஆடை உடுத்தி போகலாம் என்று தங்களுக்குள் விவாதிக்க தொடங்கினர்.ஆனால் தமிழரசியோ ஏழ்மையின் காரணமாக அவள் உடுத்தியிருக்கும் உடையை பார்த்து தோழிகள் ஏளனமாக கிண்டல் செய்தனர். இதனால் அவள் மிகவும் சோகமடைந்தால்.


 காட்டில் உள்ள தன்னுடைய இரகசிய நண்பர்களை சந்திக்கச் சென்றாள்.தனது கவலையை கூறினால், அவளோட ரகசிய நண்பர்கள் அந்த காட்டில் உள்ள மரம், செடி, அணில்,முயல்கள் ஆகும்.அவைகள் இவளின் நிலைமை அறிந்து அவளுக்கு உதவி செய்ய முன் வந்தன. அவளுக்கு மரங்களின் இலையையும்,முயல்கள் தங்களின் உடல் மீது உள்ள பட்டு, போன்ற மேனியையும் பருத்தி மூலம் நூலையும், மலர்களையும்,தந்தனர்.

 இதனை அவள் பெற்றுக்கொண்டு தனது தந்தையிடம் தனக்கு ஒரு ஆடை தைத்து தருமாறு கேட்டால்.அவளின் தந்தை அதன்படியே தைத்து கொடுக்க ஆரம்பித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் அந்த துணியை தைத்து முடித்தார். அந்த விழா நாளும் ஒரு வழியாக வந்தது.

புதுப்புது ஆடையுடன் விழாவிற்கு வந்தனர்.தமிழரசி மிகவும் அழகான வெள்ளை நிற ஆடையில் பூக்கள் அலங்காரம் செய்து இளவரசி போல் காட்சியளித்தால்.இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.


அந்த நாட்டு ராஜாவின் மகன் கபிலன் தனது வருங்கால மனைவியை தேர்ந்தெடுக்க நடத்தப்பட்ட இந்த விழா தமிழரசியின் அழகை கண்டு மயங்கி,அவளை மணந்தான்.


 இருவரும் மகிழ்ச்சியுடன் தங்களின் வாழ்க்கையை தமிழரசியின் ரகசிய நண்பர்களுடன் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தனர்.


 நீதி: பிறரைக் கண்டு ஏளனம் செய்தல் கூடாது.


Rate this content
Log in