Adhithya Sakthivel

Others

5  

Adhithya Sakthivel

Others

மேற்கு தொடர்ச்சி மலைகளின் கட்டுரை

மேற்கு தொடர்ச்சி மலைகளின் கட்டுரை

4 mins
1.1K


முன்னுரை:

மேற்குத் தொடர்ச்சி மலை  இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.[1] இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன.


பரவல்:

இம்மலைத்தொடர் மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.

ஆறுகள்:

தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகுகின்றன. இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா வில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் தாமிரபரணி. கோவையில் சிறுவாணி "உலகின் இரண்டாம் சுவைமிகு நீர்" , பவானி , நொய்யல் என நதிகள் பிறக்கின்றன. இவை தவிர பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. புவியியல் ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அரபிக்கடலிற்கு அருகில் அமைந்துள்ளதால் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் சிறிய ஆறுகளேயாகும். அவற்றுள் சில முல்லை பெரியாறு, சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கபினி ஆறு, கல்லாவி ஆறு, பெண்ணாறு மற்றும் பெரியாறு ஆகும்.

இந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும் மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. மகராட்டினத்தில் உள்ள கோபாளி அணை, கோய்னா அணை, கேரளாவில் உள்ள பரம்பிகுளம் அணை, தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணைக்கட்டு போன்றவை குறிப்பிடத்தகுந்தவைகளாகும்.


மும்பைக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி

             

புனே அருகில்

      

தூத் சாகர் அருவி, கோவா

மேற்குத் தொடர்ச்சி மலையோரம் பசுமை நிறைந்த மாவட்டங்கள்!

ஒரு காலத்தில் தமிழகம் என்றாலே பசுமை நிறைந்த வயல்களும், சிலுசிலுவென்ற காற்றும், எக்காலத்திற்கும் கொட்டிக் கொண்டே இருக்கும் அருவிகளே அடையாளமாக திகழ்ந்தன. ஆனால் இன்று அப்படியா, வளர்ச்சியும், திட்டங்களும் கொஞ்சம், கொஞ்சமாக வளங்களை கூறுபோட்டு இவையனைத்தும் இருந்த அடையாளங்கயையே புதைத்து வருகிறது. அப்படியிருக்க இன்றும் ஒரு சிலப் பகுதிகள் மிச்சம், மீதியுள்ள வளங்களை கட்டிக் காத்து பசுமையாகக் காட்டியளித்து வருவது மகிழ்ச்சி. இந்த பசுமைக் காடுகளும், வயல்வெளிகளும் தென்னிந்தியாவில் குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் எங்கவெல்லாம் உள்ளது என உங்களுக்குத் தெரியுமா ?

கோயம்புத்தூர்:

கோவை குற்றாலம்

கோவை குற்றாலம் கோயம்புத்தூர் அருகிலுள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலம் ஆகும். பல அடுக்குகள் கொண்ட நீர்வீழ்ச்சியின் ரம்மியமான தோற்றம் இங்கு காணக் கிடைப்பதால் இது புகழ் பெறுகிறது. சிறுவாணி ஆற்றிலிருந்து பிறக்கும் இந்த சிகரம் கோயம்புத்தூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பகுதியாக உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் எளிதில் அடையக்கூடிய இடமாக கோவை குற்றாலம் அமைந்துள்ளது. புகழ்பெற்ற சிறுவாணி அணை இந்த நீர்வீழ்ச்சிக்கு மேல் தான் கட்டப் பட்டுள்ளது.


பிளாக் தண்டர் தீம் பார்க்

பிளாக் தண்டர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு கேளிக்கை பூங்கா ஆகும். இது கோயம்புத்தூரில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. 75 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இது மிகப் பெரியதாகவும் அதிக இடவசதி கொண்டதாகவும் உள்ளது. இந்தப்பூங்கா நீலகிரி மலையடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் அதன் தேயிலை, காப்பித்தொட்டங்களின் அழகான காட்சியமைப்பு இங்கிருந்து காணக் கிடைப்பதால் இந்த சுற்றுப்பகுதியின் அழகு இன்னமும் மெருகூட்டப்படுகிறது.


திண்டுக்கல்

ஆத்தூர் காமராஜர் ஏரி மற்றும் காமராஜர் அணை

காமராஜர் ஏரி மற்றும் காமராஜர் அணை ஆத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கின்றன. காமராஜர் ஏரியானது 400 ஏக்கர் பரந்து மேற்கு தொடர்ச்சி மலை நோக்கி அமைந்துள்ளது.


திண்டுக்கல் மலை

திண்டுக்கல் மலை திண்டுக்கல்லின் முக்கிய சுற்றுலா அம்சமாகும். திண்டுக்கல்லின் பெயர் இம்மலையில் இருந்தே பெறப்பட்டது. அதாவது ‘திண்டு' என்றால் தலையணை என்று அர்த்தம், ‘கல்' என்றால் மலை என்று அர்த்தம். இந்த மலையானது இந்நகரத்தை துருத்தி கொண்டு தலையணை போன்ற வடிவத்தில் காணப்படுவதால் இந்த பெயர் வந்தது. இந்த மலைகளின் உச்சியில் திண்டுக்கல் கோட்டையானது அமைந்துள்ளது.


தேனி

சுருளி நீர்வீழ்ச்சி

மேகமலையில் ஊற்றெடுக்கும் சுருளி நீர்வீழ்ச்சி முதலில் ஒரு குட்டையில் தேங்கி அதனை நிரப்பி விட்டு, அதன் பின்னர் சுமார் 40 அடி நீளத்திற்கு விழுகிறது. தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்த அருவியின் சிறப்பையும், வனப்பையும் பற்றி இளங்கோவடிகள் பாடியுள்ளார். தேனிக்கு வருபவர்கள் காண வேண்டிய முதன்மையான சுற்றுலாத் தலம் இந்த நீர்வீழ்ச்சியாகும். மழைக்காலங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சிக்கு பயணிக்கின்றனர்.

Mprabaharan


போடி மெட்டு

மேற்குத் தொடர்ச்சி மலையில் கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் வீற்றிருக்கும் போடி மெட்டு ஒரு தனித்தன்மையான சுற்றுலாத் தலமாகும். அழகிய சுற்றுலா தலமான போடி மெட்டு ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. பல்வேறு அரிய வகை விலங்குகள் மற்றும் பறவைகளை உடைய போடி மெட்டு பகுதி வன உயிர் மற்றும் தாவரங்களை அதிகமாக பெற்றுள்ள இடமாகும்.

Vinoth Chandar


சோத்துப்பாறை அணைக்கட்டு

வராக நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சோத்துப்பாறை அணைக்கட்டு கொடைக்கானல் மலையின் பின்பகுதியில் உள்ள கண்கவரும் சுற்றுலாத் தலமாகும். பெரிய குளத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த அணைக்கட்டிற்கு குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ வந்து குதூகலமாக இருக்க முடியும். இந்த அணைக்கட்டிற்கு செல்லும் வழியில் இருபுறமும் மாமரங்கங்ள் நடப்பட்டிருக்கின்றன. கோடைகாலத்தில் இந்த அணைக்கட்டிற்கு சுற்றுலாப் பயணமாக வந்தால், நீர்த்தேக்கத்தின் அழகை ரசித்தபடியே, மாம்பழச் சாற்றினை பருகிட முடியும்.

Paulshaffner


திருநெல்வேலி

குற்றாலம்

மேற்கு தொடர்ச்சி மலைகளின் மீது கடல் மட்டத்திலிருந்து 167 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள குற்றாலம், எண்ணற்ற சுகாதார ஓய்வு விடுதிகள், கிளினிக்குகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட நீர்வீழ்ச்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எண்ணற்ற அருவிகளும் மற்றும் ஆறுகளும் இவ்விடத்தின் கண்களை கவரும் அழகை மேலும் அதிகரிக்க செயவதால் இன்று மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.

Mdsuhail


பாபநாசம் அணை

பாபநாசம் அணை 1942-ஆம் ஆண்டு மேற்கு தொடர்ச்சியில் உள்ள பொதிகை மலையில் கட்டப்பட்டது. இந்த அணை தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பாபநாசம் அருவிக்கு மிக அருகாமையில் உள்ளது. சிவபெருமானும் பார்வதி தேவியும் அகஸ்திய முனிவருக்கு காட்சி தந்து அருளிய இடமாக இது கருதப்படுவதால், இது ஒரு புண்ணிய தலமாக திகழ்கிறது. இதற்கு மரியாதை செய்யும் விதமாக இங்கே நிறுவப்பட்டதுதான் அகஸ்தியர் கோவில். மலைகளாலும் மரங்களாலும் சூழ்ந்துள்ள இந்த அணையை பார்க்க ஒரு அழகிய ஓவியத்தை போலத்தான் இருக்கும். அதனாலேயே பல சுற்றுலாப் பயணிகளை இந்த இடம் ஈர்க்கிறது.

Soundharya


மாஞ்சோலை மலை

மாஞ்சோலை மலை என்ற மலை வாழிடம் தேயிலை தோட்டத்திற்கு பெயர் போன்றது. இந்த மலையின் உயரம் சுமார் 1162 மீட்டர் இருக்கும். பல ரகத்து தேயிலைச் செடிகள் இங்கு வளர்க்கப்படுகிறது. இயற்கை எழிலுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது இந்த மலை. இந்த மலையின் அமைதியான சூழல் இங்கு வருபவர்களுக்கு மன அமைதியையும் ஓய்வையும் தரும். கக்கச்சியும், நலுமுக்கும் மாஞ்சோலை மலையின் அருகில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள்.

Utharamalabar


கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் திருநெல்வேலி மாவாட்டமும், வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் கேரள மாநிலமும் அமைந்திருக்கின்றன. கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் கன்னியாகுமரியிலுருந்து ஏறக்குறைய 85 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.


முடிவுரை:

இம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது.


Rate this content
Log in