கொரானோ வைரஸ் தொற்று
கொரானோ வைரஸ் தொற்று


கொரானோ வைரஸ்
சஞ்சீவி மலையே நாம் தான்: இன்னும் ஏன் காலம் தாழ்த்த வேண்டும்?
மாற்றம் செய்த நாள்: ஏப் 16,2020 09:22
Home 10
உலகம் பல்வேறு தொற்றுநோய்த் தாக்குதல்களை இதுவரை சந்தித்திருக்கிறது. பிளேக், அம்மை, புளூ, காலரா, மலேரியா, எய்ட்ஸ், பன்றிக்காய்ச்சல், டெங்கு போன்றவை, லட்சக்கணக்கில் உயிர்களைப் பலி வாங்கியிருக்கின்றன. தற்போது கொரானோ வைரஸ் தொற்று நோய் விஸ்வரூபம் எடுத்து, உலகையே உலுக்கி வருகிறது. ஆனால், உங்களுக்குச் சில நல்ல செய்திகளை சொல்ல விரும்புகிறேன்.
இந்தியர்களை ஒன்றும் செய்யாது
கொரோனா, இந்தியர்களை அதிகம் பாதிக்காது. 33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில், இதுவரை, 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 20 ஆயிரம் பேர் மடிந்துஉள்ளனர். ஆனால், 130 கோடி மக்கள் தொகையுள்ள நம் நாட்டில், இதுவரை, 10 ஆ
யிரம் பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, 350 பேர் இறந்துள்ளனர். இதற்கு சில சுவாரஸ்யமான காரணங்கள் உண்டு. கொரோனா வைரஸ், 5 முதல் 11 டிகிரி செல்ஷியஸ் வரை அமோக மாக வளரும். நம்ம ஊர், 40 டிகிரி செலஷியஸ் வெயிலில், நிச்சயம் தாங்காமல் செத்து விடும்.இந்தியர்களின் ரத்தத்தில் வெள்ளை அணுக்களில், 'நேச்சுரல் கில்லர்' செல்கள் அதிகம் உண்டு. எந்த தொற்றுக் கிருமிகளையும் எளிதில் மடக்கி அழிக்கும் திறன் அதிகம்.நம் உடலில் அபூர்வமான மைக்ரோ- ஆர்.என்.ஏ., இருக்கிறது. இது, உடலில் புகும் வைரஸ்களை மரபு மாற்றம் செய்து, வலு இழக்கச் செய்து விடும்.காசநோய் தடுப்புக்காகப் போடப்படும், பி.சி.ஜி., ஊசி கொரோனாவை தடுப்பதற்கும் உபயோகமாகும் என, ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. நம் நாட்டில், பி.சி.ஜி., ஊசி போடுவது கட்டாயம் என்பதால், நம் மக்களுக்கு ஏற்கனவே நல்ல தடுப்பு அரண் இருக்கிறது.