anuradha nazeer

Others

4.9  

anuradha nazeer

Others

கைகேயி part2

கைகேயி part2

2 mins
347


கைகேயி part2

ஒருமுறை தசரதன் வேட்டையாடச் சென்றபோது குளத்தில் தண்ணீர் எடுக்க வந்த ஒரு சிறுவனை, மான் என்று நினைத்து தன் அம்பு மூலம் தசரதன் சிறுவனை,கொன்றார். அந்த சிறுவனுடைய பெற்றோர்கள் கண் இல்லாதவர்கள் .அவர்களிடம் இந்த சிறுவனை எடுத்துச் சென்று நடந்ததைக் கூறினான் தசரதன் மகனை இழந்த துயரத்தில் அந்த பெற்றோர்கள் தசரதனுக்கு கடும் சாபம் ஒன்று கொடுத்தனர் எங்களை போல நீ புத்திரனைப் பிரிந்து அந்த சோகத்தில் நீ உயிர் து றப்பாய் என்ற ஒரு சாபத்தை தசரதனுக்கு கொடுத்து அவர்கள் இறந்து போனார்கள்.

        வேட்டைக்கு சென்று திரும்பிய தசரதன் இதை வெளியில் சொல்லாமல் மிகவும் கலங்கி போய் தவித்து இருந்தான் இதனை பார்த்த கைகேயி தேர்ப் பாகனை அழைத்து அவனிடம் விஷயத்தை கேட்கும் போது தசரதனுக்கு கிடைத்த சாபம் பற்றி தெரிந்து கொண்டாள்.

       ஏற்கனவே கைகேயிக்கு பிறகு நடக்க இருப்பது முன்பே தெரியும். மேலும் அரண்மனை ஜோதிடர்களை அழைத்து தன்னுடைய பிள்ளைகளின் ஜாதகத்தையும் தசரதனின் ஜாதகத்தையும் கொடுத்தார், அப்போது சிம்மாசனத்தில் யார் அமர்ந்தாலும் சில நாட்களில் தசரதன் இறந்து போவார் என்று கூறினார்கள் அந்த ஜோதிடர்கள். அந்தக் கண்ணில்லா தம்பதியினர் புத்திரனைப் பிரிந்து ப டுவாய் என்ற சாபம் ,புத்திரன் இறந்து போவான் என்ற அர்த்தத்தில் கொடுக்கப்பட்டாலும் இதனை மாற்ற முடியும் என்றும், அதற்கு பரிகாரமும் சொன்னார்கள் அந்த ஜோதிடர்கள். ஒருவேளை புத்திரன் தந்தையை விட்டு வெகுதூரம் பிரிந்து சென்றுவிட்டால் அந்த உயிரை காப்பாற்ற முடியும், தந்தையுடைய உயிர் மட்டுமே பிரியும் என்று ஜோதிடர்கள் விளக்கம் கூறினார்கள் இதனால் தசரதன் இறப்பது உறுதி .ஆனால் பிள்ளையை காப்பாற்ற வேண்டுமே என்று எண்ணினாள் கைகேயி. அதேநேரம் தன் பரதனை விட ராமனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே அவளுக்கு தோன்றியது.

       இதனால் ராமனுக்காக தன்னுடைய கணவரையும் தன்னுடைய சொந்த மகனான பரதனையும் இழக்க தியாகம் செய்யத் துணிந்தாள் கைகேயி. அதன் காரணமாகவே பரதனுக்கு பட்டாபிஷேகம் செய்ய வேண்டும் என்று வற்புறுத் தினார்கள் அதேநேரம் ராமன் காட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று தசரதனிடம் கூறினாள்.அதாவது தசரதன் கொடுத்த வரங்களை ராமனை காப்பாற்றுவதற்காக பயன்படுத்திக் கொண்டாள் கைகேயி.

 ஆனால் உண்மை புரியாமல் அனைவருமே கைகேயியை இகழ்ந்தனர்.

இப்படி நல்ல உள்ளம் கொண்டவர் தான் கைகேயி ஆவார்


Rate this content
Log in