STORYMIRROR

anuradha nazeer

Others

4  

anuradha nazeer

Others

கைகேயி part1

கைகேயி part1

3 mins
275

கைகேயி part1


கைகேயி தசரதனின் மனைவி, பரதனின் தாய், ராமன் லட்சுமணன் சீதை வனவாசம் செல்வதற்கு காரணமாக இருந்தவர் பார்ட் 1கைகேயி, தசரதன் இறப்பிற்கு காரணமாக இருந்தவரும் கைகேயி தான் இப்படி கைகேயி பற்றி பேசுபவர்கள் பலர் உண்டு ஆனால் உண்மையில் கைகேயி ஒரு உத்தமமான பெண் ஆவார்.

கைகேயி சரஸ்வதியின் அம்சம் ஆவார். அதனால் கைகேயின் நிஜப் பெயர் சரஸ்வதி, கேகய மன்னனின் மகள் என்பதால் சரஸ்வதிக்கு கைகேயி என பெயர் உண்டானது.

       கைகேயின் தகப்பன் அச்வபதி ஆவார் இவர் வேதத்திலும் கலைகளிலும் மிகுந்த திறமைசாலி என்பதால் போன ஜென்மத்தின் பலா பலன்களை கண்டறியும் சக்தி இவருக்கு இருந்தது பிரச்சினை என்று தன்னை நாடி வருபவர்களுக்கு, அவரவர் பூர்வ ஜென்மத்தின் அடிப்படையில் அதனால் ஏற்படும் சுக துக்கங்களையும் உணர்ந்து இது செய்யலாம் இது செய்யக் கூடாது என்று சொல்லி தன்னை நாடி வருபவர்களை வழிகாட்டுவார் இப்படி பல அரசர்கள் இந்த அச்வபதி மன்னனிடம் வந்து தங்களுடைய எண்ணங்களை தீர்த்துக் கொண்டு சென்றுள்ளனர்.

      தன் தந்தையைப் போலவே இதே வேலையை கைகேயையும் செய்ய ஆரம்பித்தாள் அடுத்தவரின் குறையை தீர்க்கும் பணியை செய்துவந்தார் ஒருநாள் அயோத்திய மன்னன் தசரதன் தனக்கு குழந்தை இல்லாத தன் காரணமாக இதற்கு என்ன பரிகாரம் செய்தால் தனக்கு குழந்தை பிறக்கும் என்று கேகய மன்னனிடம் சென்று கேட்கலாம் என்று அச்வபதியை பார்ப்பதற்காக வந்தான்.

     தன் தகப்பனை பார்க்க வந்த அயோத்தி மன்னர் தசரதனை அன்போடு வரவேற்றாள் கைகேயி.

        தசரதனிடம் கைகேயி, மன்னா! என்ன காரியமாக இங்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டாள், அதற்கு தசரதனும் பெண்ணே எனக்கு குழந்தை செல்வம் இல்லை அந்த மனக்குறை போக்குவதற்காக உங்களுடைய தகப்பனார் அச்வபதியை பார்க்க வந்தேன் என்றார்.

      உடனே கைகேயி நான் உங்களுக்கு வழியை கூறுகிறேன் என்று தசரதனுடைய முன் ஜென்ம பலன்களை ஆராய்ந்தார், மேலும் கைகேயி

       குழந்தை பிறப்பதற்கு ஒரு வழியை சொன்னார்,அதில் தசரதரின் பூர்வ ஜென்ம வரலாறே இருந்தது அதை கேட்டவுடன் திகைத்து போனார் போன பிறவியில் நீங்கள் உலகுக்கே ஒளி கொடுக்கும் சூரிய பகவானாக இருந்துள்ளீர்கள் ,காயத்ரி சாவித்ரி சரஸ்வதி என மூன்று மனைவிகள் உங்களுக்கு இருந்தார்கள். இந்த பிறவியில் நீங்கள் தசரத மன்னராக பிறந்துள்ளீர்கள் உங்கள் மூன்று மனைவியரும் இந்த பிறவியிலும் உங்களை மணந்து கொள்வதற்காக தயாராக உள்ளனர் அதில் காயத்ரி தான் உங்களுடைய முதல் மனைவி கௌசல்யா தேவி ஆவார் சாவித்திரி சுமித்ரா தேவி நான் சரஸ்வதி கைகேயை ஆவேன் நீங்கள் என்னையும் மணம் செய்து கொண்டால் உங்கள் தோஷங்கள் நீங்கி, உங்களுக்கு குழந்தை பிறக்கும் இது விஷயமாக என்னுடைய தந்தையிடம் நீங்கள் பேசுங்கள் என்று கைகேயி தசரதனிடம் கூறினாள். தசரதரும் அச்வபதி மன்னனை சந்தித்து நடந்ததை விவரித்தார். அதைக்கேட்ட அச்வபதியும் ஒத்துக் கொண்டார் இதனால் தசரதர் கைகேயிக்கு திருமணமானது நடந்தது.

   தசரதனுடைய மூன்று மனைவியரில் கைகேயி தான் இளையவள் .அழகே உருவானவள் .வீரமும் வேகமும் கொண்டவள் .அனைவரிடத்திலும் அன்பும் பண்பும் பாசமும் கொண்டவள். அதன் காரணமாக அனைவரின் நன் மதிப்பையும் பெற்றவர் கைகேயி,

     தன்னுடைய மகன் பரதன் இடத்தில் வைத்த அன்பை விட ராமன் இடத்தில் மிகுந்த அன்பு வைத்திருந்தாள் கைகேயி.

 ஒரு முறை சம்பராசுரன் என்ற அசுரனுடன் தசரதன் போர் புரிந்தார்.

        அப்போது தசரதனுடைய தேருக்கு சாரதியாக இருந்தவர் கைகேயி. திடீரென்று அந்த தேரின் அச்சு முறிந்தது உடனே கைகேயி தன் விரலையே அச்சாணியாக கொடுத்து தன் உயிரையும பணயம் வைத்து தசரதனின் உயிரைக் காப்பாற்றினாள்.

    கைகேயி ரதத்தின் அச்சாணிக்கு பதிலாக தன்னுடைய ஆள்காட்டி விரலை அச்சாணியாக பயன்படுத்தினார்.

    கைகேயின் ஆள்காட்டி விரல் ஒரு இரும்பு விரல் ஆக இருந்தது. அதற்கு காரணம் என்ன வென்றால் துர்வாச முனிவர் ஒரு முறை தசரதனுடைய அரண்மனையில் தங்கினார்.

       அப்போது கைகேயி துர்வாச முனிவரை தனது ஆள்காட்டி விரலை காண்பித்து தனது தோழிகளிடம் ஏதோ சொன்னார் அதனை பார்த்து கோபம் கொண்ட துர்வாசர் முனிவர் கைகேயி உன்னுடைய ஆள்காட்டி விரல் மட்டும் இரும்பாக போகட்டும் என்ற ஒரு சாபத்தை கொடுத்தார்.

      அதன் காரணமாகவே கைகேயி உடைய ஆள் காட்டி விரல் இரும்பு ஆனது இந்த இரும்பு இருந்ததன் காரணமாகவே தசரதனுடைய சாரதியாக இருந்த போது தேரின் அச்சாணி முறிந்த போது அந்த இரும்பு விரலை அச்சாணியாக பயன்படுத்தி தசரதன் உயிரை காப்பாற்றினாள் கைகேயி. இதனை பார்த்த தசரதன் இரண்டு வரங்களை கைகேயிக்கு அளித்தான் .ஆனால் தற்போது அந்த வரங்கள் வேண்டாம். எனக்கு தேவைப்படும் போது அந்த வரத்தை நான் கேட்கிறேன் என்று கூறிவிட்டாள் கைகேயி. அப்படியிருக்கும் போது தான் ராமன் முடி சூட்டும் போது இராமன் வனவாசம் போக வேண்டும் என்றும் பரதன் முடிசூட்டிக் கொள்ள வேண்டும் என்ற தன்னுடைய வரத்தை கேட்டாள் கைகேயி .இதற்கு ஒரு காரணமும் உண்டு.

      


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை