இளம்பெண்
இளம்பெண்


இந்தியாவை சேர்ந்த ரூமா பைரபகா (24) என்கிற இளம்பெண், ஜார்ஜியாவின் எப்சிபாவில் உள்ள நடுநிலைப் பள்ளி ஒன்றில் இயற்பியல் மற்றும் சமூக ஆய்வு பாடப்பிரிவு ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர் 13 வயது சிறுவனுக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பி, தவறாக நடந்து கொண்டதாக ஜனவரி 16 அன்று கைது செய்யப்பட்டார்.
அமெரிக்க குடியுரிமை அல்லாத பைரபகா, காவலில் இருந்து விடுவிக்கப்பட்டால் குடியேற்றக் காவலில் ஒரு கூட்டாட்சி தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார் என்று ஆகஸ்டா குரொனிக்கல் செய்தி வெளியிட்டுள்ளது. சிறுவர் துன்புறுத்தல் மற்றும் அநாகரீகமான நோக்கங்களுக்காக ஒரு குழந்தையை கவர்ந்திழுத்தல் உள்ளிட்டவைகளுக்காக அவர் கூடுதல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு 27,700 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 20 லட்சம்) ஜாமீன் பத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பைரபகா மாணவர் விசாவில் அமெரிக்காவில் இருக்கிறார். இதன் விளைவாக நாடு கடத்தப்படுவதை எதிர்கொள்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கறிஞர்களின் கூற்றுப்படி, ஆசிரியை மீது காதல் வலையில் விழுந்து சிறுவன் பல சந்தர்ப்பங்களில் அவரை சந்திக்க வீட்டிற்கு தெரியாமல் சென்றுள்ளான் என தெரியவந்து உளளது.