anuradha nazeer

Others

4.8  

anuradha nazeer

Others

எத்தனை கங்கைகள்

எத்தனை கங்கைகள்

2 mins
23.3K*கங்கையில் நீராடுவது, கங்கைக் கரையில் வசிப்பது, 'கங்கா' என்று உச்சரிப்பது, கங்கையின் நீரைப் பருகுவது, கங்கையை நினைப்பது...இவை யாவும் பாவம் போக்கும் செயல்களாகும்!*


*இமயமலையில், 'கோமுக்' பனிச் சிகரத்தில் உற்பத்தியாகி,* *மேற்கு_வங்காளத்தில் உள்ள #கங்கா_சாகரில் (வங்கக் கடலில்) சங்கமிக்கிறாள் கங்காதேவி! இவள், தான் பாய்ந்து வரும் வழிநெடுகிலும் உள்ள பல்வேறு தலங்களில், பல்வேறு சிறப்புகளுடன் திகழ்கிறாள்!*


*அமர்_கங்கா:*


*கடல் மட்டத்தில் இருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் உள்ளது அமர்நாத் குகை. இதன் அருகே ஓடும் 'அமர் கங்கா' நதி நீர் எப்போதும் குளிர்ச்சியாகவே இருக்கும்.!*


*நீல_கங்கா:*


*ஒரு முறை, பார்வதிதேவியுடன் விளையாடியபோது, அவளின் கண் மை, சிவனாரின் முகத்தில் ஒட்டிக் கொண்டது. பரமனார் கங்கையில் முகம்கழுவ... நதி நீர், நிறம் மாறியது! இதனால், 'நீல கங்கா'எனப் பெயர் பெற்றது.!*


*காளி_கங்கா:* 


*அமைதியின்றி ஆர்ப்பரித்து ஓடும் இந்த நதியின் சீற்றம், காண்போரை பயம் கொள்ள வைக்கும்.!*


*ராம்_கங்கா:*


*இது, உத்தரப் பிரதேசத்தில்- காசிப்பூர் என்ற இடம் தாண்டிப் பாய்கிறது.!*


*ஜட_கங்கா:*


*உத்தரப் பிரதேசம், குமாயூன் மண்டலின் பித்தோ ராகர் என்ற ஜில்லாவில் பாய்கிறது.!*


*கோரி_கங்கா:*


*வெண்மையான நீர் கொண்டு வருவ தால் கோரி (வெள்ளை) கங்கா என்று பெயர் தார்சூலா/முன்ஸியாரி கிராமத்தையடுத்து பாய்கிறது.!*


*கருட_கங்கா:*


*உத்தரப் பிரதேசம், அல்மோரா- பைஜ்நாத் சோத்திரம் அருகே பாயும் கங்கைக்கு, 'கருட கங்கா' என்று பெயர்.!*


*பாண_கங்கா:*


*'ஜம்மு'வைத் தாண்டி, ஸ்ரீவைஷ்ணவி கோயில் அருகே பாய்கிறது பாண கங்கா.!*


*பால_கங்கா:*


*இந்த நதி நீரில், ஸ்ரீவைஷ்ணவிதேவி தன் கூந்தலை அலசிய தால், 'பால கங்கா' என்றுபெயர்!*


*ஆகாச_கங்கா:*


*கயிலாய மலையை பரிக்ரமா (கிரிவலம்) செய்யும்போது, அங்கு காணப்படும் நதியே ஆகாச கங்கை!*


*பாதாள_கங்கா:*


*ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீசைலம் என்ற சிவ சோத்திரத்தின் அருகே பாய்கிறது 

பாதாள கங்கா!*


*தேவ_கங்கா:*


*இது, மைசூர்- சாமுண்டி மலைக்குக் கிழக்கே பாய்கிறது.!*

*துக்த_கங்கா:*


*வடமொழியில் 'துக்தம்' என்றால், பால் என்று பொருள். கேதார்நாத் என்ற ஜோதிர்லிங்க சோத்திரத்தின் அருகே பாய்கிறது.!*


*வாமன்_கங்கா:*


*வாமன் என்றால், 'குள்ளம்' என்று அர்த்தம்! மத்தியப் பிரதேசம் ஜபல்பூரில், 'பேடாகாட்' என்ற சலவைக்கல் பாறைகள் உள்ள இடத்தில் பாய்கிறது.!*


*கபில்_கங்கா:*


*நர்மதை பரிக்ரமா (வலம் வரும்) செய் யும் வழியில் வருவது, 'தம் கட்' என்ற ஊர். இங்கிருந்து சுமார் 3 மைல் தூரத்தில் ஓடுகிறது கபில் கங்கை!*


*கரா_கங்கா:*


*சோணபத்திரை நதியின் உற்பத்தி ஸ்தானத்துக்குத் தெற்கில் அமைந்துள்ள இடம் பிருகு கமண்டலம். இங்கு பாய்வதே கரா கங்கா.!*


*மோக்ஷ_கங்கா:*


*நர்மதை நதியை வலம் வரும்போது சூலபாணேஸ்வரர் எனும் சோத்திரம் வரும். இங்கிருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது 'மோக்கடி' என்ற கிராமம். இதையட்டி, 'மோக்ஷ கங்கா' ஓடுகிறது.!*


Rate this content
Log in