anuradha nazeer

Others

4.7  

anuradha nazeer

Others

செவ்வாய் தோஷம்

செவ்வாய் தோஷம்

4 mins
208


செவ்வாய் தோஷம் என்றால் என்ன? - அதற்கான பரிகாரமும், யாருக்கு தோஷம் இருக்கும்? என பார்ப்போம்...*

செவ்வாய் தோஷம் பரிகாரம் என்ன, திருமணத்தின் போது ஏன் செவ்வாய் தோஷம் இருக்கின்றதா இல்லையா என்பதை ஏன் பார்ப்பது அவசியம். எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். யாருக்கெல்லாம் செவ்வாய் தோஷ பரிகாரம் செய்வது அவசியம் என்பதை விரிவாக பார்ப்போம்.   செவ்வாய் தோஷம் பரிகாரம் என்ன, திருமணத்தின் போது ஏன் செவ்வாய் தோஷம் இருக்கின்றதா இல்லையா என்பதை ஏன் பார்ப்பது அவசியம். எப்படிப்பட்ட ஜாதக அமைப்பு கொண்டவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும். யாருக்கெல்லாம் செவ்வாய் தோஷ பரிகாரம் செய்வது அவசியம் என்பதை விரிவாக பார்ப்போம்.செவ்வாய் தோஷம் என்ன செய்யும்?

செவ்வாய் தோஷம், குஜ தோஷம், அங்காரக தோஷம் என மூன்று வகையாக பிரித்துக் கொள்ளலாம். பொதுவாக நவகிரகங்களில் ஒன்றான அங்காரகன் எனப்படும் செவ்வாய் பகவானுக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கின்றது.


இந்த செவ்வாய் பகவான் ஒரு ஜாதகத்தில் லக்கினத்தில் ( ‘ல’ என ஜாதகத்தில் போட்டிருக்கும்) இருந்து அல்லது சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றிற்கு 2,4,6,7,8,12 இந்த பாவங்களில் இருக்கும் போது செவ்வாய் தோஷம் எனப்படுகிறது. சில நேரங்களில், 6ஆம் பாவத்தை எடுத்துக் கொள்ளமாட்டார்கள்.

செவ்வாய் தோஷம் என்ன செய்யும்?

திருமணத்திற்கு முன் ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கா இல்லையா என்பதைப் பார்ப்பது அவசியம். ஏனென்றால் செவ்வாய் ரத்த சம்பந்தமானவர்.

தற்போது சகோதரத்துவத்தில் திருமணம் செய்யக்கூடாது, ரத்த சொந்தத்தில் திருமணம் செய்யக்கூடாது என கூறுகின்றனர். ஏனென்றால் அப்படி திருமணம் செய்யும் போது ஜீன் பிரச்சினையால் வருங்கால சந்ததி உருவாவதில் பிரச்சினையும், அவர்களுக்கு ஏதேனும் உடல் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, பரம்பரை வியாதிகள் உருவாக வாய்ப்புண்டு என கூறப்படுகிறது.

செவ்வாய் தோஷம் இருக்கும் போது ஒரு மனிதனின் குணங்களும், உடம்பில் இருக்கக்கூடிய ரத்தம் சார்ந்த விஷயங்கள் செவ்வாய் அமைந்துள்ள இடத்தை வைத்து நாம் தெரிந்துகொள்ள முடியும்.

மகாசிவராத்திரியில் எந்தெந்த ராசியினர் எந்த பொருளால் சிவ லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டு தெரியுமா?

அந்த காலத்திலேயே முன்னோர்கள், ஜோதிடத்தில் கிரக நிலைகளை அடிப்படையாக வைத்து இதையெல்லாம் அறியலாம் என கணித்துள்ளனர்.

அதனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்களைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது ஒருபக்கம் சரி, ஆனால் எப்படிப்பட்ட, எந்த வகை செவ்வாய் தோஷம் என்பதை தெரிந்து கொண்டு திருமணம் செய்வது அதி அற்புதமான பலன்களும், பின்னால் வரும் பிரச்சினைகளை முன்னாடியே தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.

எதெல்லாம் செவ்வாய் தோஷம் ஆகாது?

லக்கினம், சந்திரன், சுக்கிரன் ஆகிய இவற்றுக்கு 2,4,6,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தாலும், சில கிரக அமைப்பு காரணமாக அவர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை அல்லது பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து கொள்ளலாம் என ஜோதிடர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

தேவ கேரளம் என்ற ஜோதிட குறிப்பில் உள்ளபடி, லக்கினம், சந்திரன், சுக்கிரன் ஆகிய இவைகளுக்கு 2,4,6,7,8,12 ஆகிய இடங்களில் செவ்வாய் அமைந்திருந்தாலும், கீழ்க்கண்ட நிலைப்பாடுகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் அது செவ்வாய் தோஷம் இல்லை அல்லது பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்யலாம்.

கடகம் அல்லது சிம்ம லக்கினம் கொண்டிருந்தால் அவருக்கு செவ்வாய் எங்கு அமைந்திருந்தாலும் தோஷம் கிடையாது.

சிம்மம் அல்லது கும்பத்தில் செவ்வாய் இருந்தால் தோஷமாகக் கருதமுடியாது.

செவ்வாய் கிரகம் குரு அல்லது குரு உடன் சம்பந்தப்பட்ட பார்வை இருந்தால் தோஷமாக கருத முடியாது.

பரிகார செவ்வாய் தோஷம்:

குருவுக்கு 5,7,9 ஆகிய பார்வைகள் உண்டு. 5,9 என்பது சிறப்பு பார்வை, 7 என்பது எதார்த்த பார்வை. குரு இருக்கும் இடத்திலிருந்து 5,7,9 இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் நிர்தோஷம். அதாவது இவர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம்.

அதே போல் குருவின் நட்சத்திரங்களான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் செவ்வாய் அமர்ந்திருந்தால் அந்த செவ்வாய்க்கும் பரிகார செவ்வாய் என்று பெயர்.

மேஷ ராசி அல்லது விருச்சிக ராசியில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்க்கு அதிக பலம் இருக்கும். இருப்பினும் சில விதிகளால் செவ்வாய் தோஷம் இல்லை என கூறினாலும், இவர்களும் செவ்வாய் தோஷம் உள்ளவரை திருமணம் செய்துகொள்வது நல்லது.

யாருக்குக்கெல்லாம் செவ்வாய் தோஷம் கிடையாது?

ஜாதகத்தில் செவ்வாய் புதனுடன் சேர்ந்து இருந்தால் அல்லது புதனால் பார்க்கப்பட்டால் அதனை தோஷமாக கருத முடியாது. செவ்வாய், சூரியன் சேர்ந்து இருந்தாலோ ல்லது சூரியனால் பார்க்கப்பட்டால் தோஷம் இல்லை.

சனி, ராகு, கேது கிரகங்களுடன் செவ்வாய் செவ்வாய் இருந்தால் தோஷத்தை ஏற்படுத்தாது.

செவ்வாய் தனது நட்பு வீடான சிம்மம், தனுசு, மீனம் வீட்டில் அல்லது உச்ச வீடான மகரத்தில் இருந்தால் தோஷம் இல்லை.


அதே போல் செவ்வாய் தனது நீச்ச வீடான கடத்தில் இருக்க தோஷம் அடிபட்டுப் போகும்.

செவ்வாய் சந்திரனுடன் சேர்ந்து இருப்பின் தோஷம் கிடையாது.

செவ்வாய் இரண்டாமிடத்திலிருந்து, அந்த இரண்டாமிடம் புதனின் வீடாக இருப்பின் செவ்வாய் தோஷம் இல்லை.

கோயிலில் திருநீறு கொடுப்பது ஏன், அது மந்திரமா தந்திரமா? - குளிக்காமல் திருநீறு பூசலாமா?

யாருக்கு தோஷம் கிடையாது?

செவ்வாய் இருக்கும் இடத்திலிருந்து செவ்வாயின் சொந்த வீடான மேஷம் அல்லது விருச்சிகம் இருந்தால் தோஷமில்லை.

செவ்வாய் இருக்கும் 7ம் இடம் அதன் உச்ச வீடான மகரம் அல்லது நீச்ச வீடான கடகம் இருந்தால் தோஷம் இல்லை.

செவ்வாய் அமர்ந்திருக்கும் எட்டாமிடத்தில் குருவின் வீடான தனுசு அல்லது மீனம் இருந்தால் தோஷம் கிடையாது.

செவ்வாய் இருக்கும் இடத்திலிருந்து 12ஆம் இடம் சுக்கிரனின் வீடான ரிஷபம் அல்லது துலாமாக இருப்பின் தோஷம் இல்லை.

இப்படி சுமார் 100 நிலைகள் செவ்வாய் தோஷத்தைக் கணிக்கச் சொல்லப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பார்த்தல் செவ்வாய் தோஷம் வெகு சிலருக்கு மட்டும் தான் இருக்கும் எனலாம்.

செவ்வாய் தோஷ பரிகாரம்.


முதலில் நீங்களாக செவ்வாய் தோஷம் என தீர்மானித்துக் கொள்ள வேண்டாம். ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருக்கின்றது என ஜோதிடர் கூறினால் அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்.

செவ்வாய் என்றால் எந்த ஒரு செயலை முடிவு செய்து அதை வேகமாக செய்து முடிக்கத் தூண்டுபவர். எந்த ஒரு ஸ்தானத்தில் செவ்வாய் அமர்ந்திருக்கின்றாரோ அந்த இடத்திற்கான பலனை வேகமாக கொடுக்க முயற்சிக்கும். அப்படி அதில் ஏதேனும் தடங்கல் வாந்தால் அதன் எதிர்மறை குணம் வெளிப்படும்.முதலில் செய்ய வேண்டியது கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லதுசெவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு முதலில் கற்பூரம் சுற்றிப் போடுதல், மிளகாய் சுற்றிப்போடுவது கூடாது.சகோதரர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது, சண்டைப்போடுவது தவறு.கோபத்தையும், காரத்தையும் குறைக்கவும்.எந்த ஒரு சீருடை அணிந்தவருடன் வம்பு வைத்துக் கொள்ள வேண்டாம் (உதா: போலீஸ், பேருந்து நடத்துனர் உள்ளீட்டோர்.)

பரிகாரமாக, ஒவ்வொரு மாதமும் ஏதேனும் கடைசி செவ்வாய் கிழமை பாரம்பரிய பழமையான முருகன் கோயிலுக்கு சென்று வணங்கி வருவது நல்லது. வெட்டி வேர் மாலை வாங்கி தருவது சிறந்தது.செவ்வாய் கிழமைகளில் பன்னீர் பாட்டிலை முருகன் கோயிலுக்கு அபிஷேகத்திற்கு கொடுத்து வரவும்.செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு வேலை பெரிய சிக்கலை தரும் இருப்பினும் உங்களிடம் வேலை ஏதேனும் கிடைக்குமா என கேட்டு வருபவருக்கு ஏதேனும் ஒரு வகையில் உதவுங்கள்.

செவ்வாய் தோஷம் பரிகார ஸ்தலங்கள்.!!


1, ஈரோடு சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி.2, கடலூர் மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்3, காஞ்சிபுரம் அனுமந்தபுரம் வீரபத்திரர் ஆலயம்4,காஞ்சிபுரம் திருப்போரூர் கந்தசுவாமி ஆலயம்.5, சென்னை மடிப்பாக்கம் கல்யாண கந்தசுவாமி ஆலயம்6, சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆலயம்7, தஞ்சாவூர் தேனுபுரீஸ்வரர் திருப்பட்டீசுவரம்.8, திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் ஆலயம்9, திருநெல்வேலி கோடகநல்லூர் கைலாசநாதர் ஆலயம்,10, திருவாரூர் வீராவாடி அகோர வீரப்பத்திரர் ஆலயம்.11, துத்துக்குடி திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாள் கோயில்.12, நாகை மாவட்டம் வைத்திஸ்வரன் கோயில்.போன்ற கோயில் போன்றவை செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலமாகும்.!!

*திருநெல்வேலி கோடகநல்லூர் செவ்வாய்சிறப்புகள்*

பரீட்சத்து மன்னரையும், நளனையும் தீண்டிய கார்க்கோடக பாம்புக்கு மகாவிஷ்ணு முக்தியளித்த தலம் இது என்பதால் இந்த 'கார்கோடக ஷேத்திரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இன்றும் இங்கு கருநாகப் பாம்புகள் அதிகம். கோடைக்காலத்தில் இங்கு குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் அது நாளடைவில் மருவி கோடகநல்லூர் என்றாயிற்று.

நவகயிலாயத்தில் மூன்றாவதாக விளங்கும் இத்தலத்தின் இறைவன் செவ்வாய் அம்சமாக விளங்குகிறார். இது செவ்வாய் தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

ஊரின் வடக்கில் உள்ளது இந்த கோயில். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர். கோயிலுக்குள் கோபுரமோ, கொடிமரமோ இல்லை.

 ஆதிசங்கரர் இவ்வூரை 'தட்சிண சிருங்கேரி' என்று கூறியுள்ளார். தாமிரபரணி ஆற்றை இவ்வூர் மக்கள் 'தட்சிண கங்கை' என்கிறார்கள்.

திருவாதிரை, சிவராத்திரி போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறுகின்றன. மற்ற நாட்களில் ஒரு வேளை மட்டுமே பூசை நடைபெறுகிறது

திருத்தல இருப்பிடம்: இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் சேரன்மகாதேவி - முக்கூடல் செல்லும் சாலையில் உள்ள நடுக்கல்லூர் என்ற ஊரிலிருந்து தெற்கே 1 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம்.

*மூலவர் : கைலாச நாதர்**அம்பிகை : சிவகாமி அம்மன்*


Rate this content
Log in