அக்காவின் கடிதம்
அக்காவின் கடிதம்
அன்புள்ள தம்பி ஆ...இல்ல... இல்ல ....தங்கை....யாரா இருந்தாலும் சரி,
நீ எப்ப என் கூட விளையாட வருவ...
எனக்கு உன்னை பார்க்கனும்னு ரொம்ப ஆசையா இருக்கு...
என்னோட ப்ரென்ட்ஸ் எல்லாம் அவங்க தம்பி தங்கச்சி கூட விளையாடரப்போ எனக்கு யாரும் இல்லைன்னு ரொம்ப கவலையா இருக்கும்...ஆனா இப்ப தா நீ வரப்போறயே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.
நீ சீக்கரமா வா நம்ம ஜாலியா விளையாடலாம்.....நான் உனக்கு என்னோட டாய்ஸ் எல்லாத்தையும் குடுக்கற....
பாட்டி அத்தை எல்லாம் தம்பி தான் வரும்னு சொல்றாங்க.....
தம்பி வந்து அத்தை பையன மாதிரி என்ன அடிச்சா என்ன பண்றது...
என்னோட அத்தை பொண்ணு சொன்னா தம்பி வந்தா தம்பி கிட்டதான் எல்லாரும் பாசமா இருப்பாங்களாம....நான் என்ன பண்றதுனு எனக்கு ரொம்ப கவலையா இருக்கு...
நான் சோகமா இருந்தத பார்த்துட்டு அம்மா என்கிட்ட கேட்டாங்க....
நான் என்னோட கவலைய சொன்னேன்....அப்ப அம்மா சொன்னாங்க தம்பியோ தங்கச்சியோ யார் வந்தாலும் அவங்க எப்பவுமே என் மேல பாசமாத்தான் இருப்பாங்களாமா...அப்புறம் தம்பி தங்கச்சி என்ன அடிக்க மாட்டாங்களாமா....நான் அவங்க மேல அன்பா இருந்தா அவங்களும் என் மேல அன்பாதான் இருப்பாங்களாமா.
அம்மா சொன்னா அது சரியாத்தான் இருக்கும்....
எனக்கு இப்ப எந்த கவலையும் இல்ல....நான் ரொம்ப சந்தோஷமா இருக்கிறேன்....
அது மட்டுமில்ல, நான் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்க......
உனக்காக நான் ஒரு பில்லோ செய்யப்போறேன்....நீ வந்து அதுல தான் தூங்கனும் சரியா....சீக்கிரமா வா....நான் உனக்காக காத்திட்டிருக்கிறேன்.
இப்படிக்கு
உன் அன்பு அக்கா
