Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!
Unveiling the Enchanting Journey of a 14-Year-Old & Discover Life's Secrets Through 'My Slice of Life'. Grab it NOW!!

Rajeshwari Karuppaiya

Others

5.0  

Rajeshwari Karuppaiya

Others

ஆடிப்பெருக்கு

ஆடிப்பெருக்கு

2 mins
43


     

   "அடியே வேணி மணி என்னாவுது தெரியுமா... சூரியன் உன் மூஞ்சிக்கு மேல பல்ல கட்டிட்டு நிக்குது.. நீ என்னடானா சொகமா இப்படி இழுத்து போத்திகிட்டு கும்பகர்ணன் தங்கச்சியாட்டம் தூங்கிட்டு கிடக்க.... "என்று என் அம்மா மொட்டை மாடியில் தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பும் முயற்சியில் ஈடுபட்டிருக்க... நான் அசரவே இல்லையே....

    "எழுந்து தொலைடி... இன்னைக்கு ஆடி பதினெட்டு காவிரி ஆத்துக்கு போவணும்... உங்க அப்பா கட தெருவுக்கு போயிருக்காரு.. வரதுக்குள்ள கெளம்புல அந்த மனுஷன் என்னய வைவாரு.... "

   எப்ப அப்பாங்கற வார்த்தை எங்காதுல விழந்துச்சோ அந்த நிமிஷம் என் தூக்கம் ஓகையா....

   "அடி வேணி இன்னும் என்னடி இப்படி புடிச்சு வச்ச புள்ளயராட்டம் உக்காந்துருக்க.. போய் குளிச்சுட்டு கெளம்பு... "

   "சரிம்மா "என்றவாறு நானும் என்னுடைய போர்வை தலையணை பாய் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு கீழேய் போனேன்...

     எங்க அம்மா பாத்ரூம்ல தண்ணியெல்லாம் வூத்தி ரெடியா வச்சிருந்தாங்க....

      நானும் ஒருவழியா குளிச்சு கெளம்பி புது தாவணி எல்லாம் போட்டு நீட்ட கிளம்பின நேரம் எங்க அப்பா வந்தாரு...

     "அம்சா இந்தா பூவு...... மொழம் முந்நூறு ரூவா சொன்னான்...அதேன் ஒரு மொழம் மட்டும் வாங்கினேன்.. நீயும் அம்மாவும் நீயும் கொஞ்ச கொஞ்சம் வச்சுக்குங்க.... "

என்று சொன்ன நேரம் அம்மாவும் வந்தாங்க "

    "விலைவாசி எல்லாம் எம்புட்டு ஏறிப்போச்சு... சரியான மழை இல்ல.. தண்ணி இல்ல.. இப்பவே இந்த கொடும. இன்னும் நம்ம புள்ள அதுங்க புள்ளைங்க காலத்துல எப்புடி இருக்குமோ" என்று அப்பாவிடம் புலம்ப

    எங்க காலத்துக்கே இங்க ஒன்னும் மிச்சமில்ல.. இன்னும் புள்ளைங்க காலத்துக்கு போய்ட்டீங்களே... அவங்க காலத்துல ஒரு நெல் பயிரை கூட கண்ணுல பாக்க முடியாம போயிரும் என்று மனதிற்குள் நினைத்து கொண்டாள்.

   "சரி சரி பொலம்பாம சீக்கிரம் வாங்க நேரமாயிட்டுது.. "என்றார் என் அப்பா

   "நா பேசுனா மட்டும் உங்க அப்பாவுக்கு பொலம்பறது.... இவரு பேசுனா நாம ஆமாங்க அமாங்கன்னு சொல்லணும்... என்ன மாறினாலும் இவிங்களாம் அப்டியே தாண்டி இருக்காங்க " என்று என்னிடம் முணு முணுத்தார்..

    எப்படியோ நாங்களும் கிளம்பி அகண்டு விரிந்த காவிரிய பாக்க போனோம்.. அங்க போய் காவிரி தண்ணிய வச்சு பொங்கல் வச்சிட்டு வருவோம்...

 

   எனக்கு இன்னும் நல்ல நியாபகம் இருக்கு.. சின்ன வயசுல அப்பா கூட வந்து அப்படி ஒரு ஆட்டம் போடுவேன்.. அப்படியே கடல் மாதிரி தண்ணி இருக்கும்... நா நீச்சல் காத்துக்கிட்டது கூட அதுல தான்... அங்கேயே குளிச்சுட்டு புது துணி போட்டுட்டு எங்கப்பா கூட ஜாலியா சுத்திருக்கேன்...

    "ஏ அம்சா.... அம்சவேணி..." என்ற என் அப்பாவின் கத்தலில்தான் காவிரி ஆத்துக்கு வந்துட்டோம்ங்கறது தெரிஞ்சுது...

    நிறைய பேர் வந்திருந்தனர்.. நாங்களும் பொங்கல் வைக்க தோதான இடம் பார்த்து எல்லாவற்றையும் எடுத்து வைத்தோம்...

  "ஏ வேணி போய் காவிரி தண்ணி கொண்டா.... அதை வச்சுத்தான் பொங்கல் வச்சு சாமி கும்பிடனும்.. "

   நானும் எங்க அம்மாட்ட குடத்தை வாங்கிட்டு தண்ணி எடுத்து வர போனேன்.. அங்க இருந்த லைன் பாத்து எனக்கு மயக்கம் வராத குறை தான்...

   எப்புடியோ அரைமணி நேரத்துக்கும் மேல நின்னு கிட்ட போனேன்.

   என் முன்னாடி நின்ன ஒரு பாட்டி நா குடத்தை எடுத்த வொடனே வெரசா வெய்யி.. தண்ணி வீணாக்கப்புடாது.. அப்டினு அட்வைஸ் பண்ண உடனே வந்துச்சு பாரு கோவம்... உடனே ஆமா சேமிக்க வேண்டியப்ப ஒழுங்கா எதையும் சேமிக்காம இப்ப வந்து என்கிட்ட வேய்க்காணம் பேசுது கிழவி என்று திட்டினேன்... என் மனசுக்குள்ள தாங்க

   அப்புறம் என்னங்க, தண்ணிய பைப்ல புடிச்சுட்டு வந்து அம்மாட்ட கொடுத்துட்டேன்.

  பாலைவனமாட்டம் இருந்த காவிரி ஆத்த பாத்த உடனே எனக்கு அழுகையே வந்திருச்சு... நான் அழுகிறதா பாத்துட்டு என்கிட்ட வந்து எங்க அப்பா

  இப்ப அழுது ஒரு புரயோசனமும் இல்ல அம்சா.. இருக்கற காடு எல்லாம் அழிச்சுட்டாங்க.. அதையெல்லாம் கட்டடம் ஆகிருச்சு.. நிலத்தடி நீரை வேணுங்க மட்டும் உறிஞ்சிட்டாங்க.. பெஞ்ச கொஞ்சம் மழையையும் சேமிக்கல.... அதான் இப்படி காவிரி ஆத்துக்குள்ள போர் போட்டு அந்த தண்ணிய பைப்ல காவிரி தண்ணின்னு யூஸ் பண்றோம்... இப்படியே போன அடுத்த தலைமுறைக்கு எதுவுமே மிஞ்சாது...

  சரி போய் அம்மாக்கு ஏதாச்சும் உதவி செய்" அப்டினு சொல்லிட்டு போய்ட்டார்...

   நானும் எங்க அம்மாகிட்ட போறேன்... நீங்களாச்சும் முடிஞ்ச அளவு மரம் நடுங்க..

தண்ணிய வீணாக்காதீங்க... மழை நீரை சேமியுங்க... சரி நா போறேன்.. இல்லனா எங்கம்மா வெரட்டி வெரட்டி அடிக்கும்.........Rate this content
Log in