STORYMIRROR

anuradha nazeer

Others

5.0  

anuradha nazeer

Others

ஆக்ரா

ஆக்ரா

1 min
34


ஆக்ரா, உத்தர பிரதேசம் ஆக்ரா அருகே ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டிக்கும் 22 வயது இளைஞனுக்கும் ஏற்பட்ட காதல் திருமணம் நோக்கி சென்றதால் மூதாட்டியின் கணவர் போலீசில் புகார் அளித்தார்.


உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரகாஷ் நகர் எட்மாடுடாவுலா காவல் நிலையத்திற்கு விநோதமான புகார் ஒன்று வந்தது.

ஏழு குழந்தைகளின் தாயான 60 வயது மூதாட்டியின் கணவர் அந்த புகாரை அளித்தார். அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனுக்கும் தன் மனைவிக்கு

ம் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக புகாரில் தெரிவித்திருந்தார்.அதிர்ச்சியடைந்த போலீசார் மூதாட்டி இளைஞன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை விசாரணைக்காக அழைத்தனர்.

பின் விளைவு குறித்து கவலைப்படாத மூதாட்டியும் இளைஞனும் தங்கள் காதலில் உறுதியாக இருப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் போலீசாரிடம் கூறினர். 'திருமண முடிவு சரியல்ல இருவரும் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும்' என குடும்பத்தினர் மற்றும் போலீசார் அறிவுரை கூறினர். அதை ஏற்காமல் இருவரும் வீம்பு பிடித்ததால் அந்த இளைஞன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்த போலீசார் காதல் ஜோடியை எச்சரித்து அனுப்பினர்.


Rate this content
Log in