வரம் வேண்டும்
வரம் வேண்டும்
1 min
5
மாலை வேளை
மழையின் சாரல்
மெது மெதுவாய்
மண்ணை நனைக்க
ஏனோ மனம்
உனை எண்ணி
தவிக்கிறது...
மீண்டும் ஒரு வரம்
வேண்டும்
இப்படியொரு
மாலை நேரம்
மழையின் ஈரக்காற்றில்
உன்
கைகள் கோர்த்து
தோள் உரசிட
ஒரு சிறு பயணம்...
அன்பின் கதை பேசி
காதலோடு கடக்க வேண்டும்...
