இயற்கை
இயற்கை
1 min
1
ஒப்பனை செய்யா
பேரழகியே
கொஞ்சம் உன்னை
வர்ணனை செய்யவா..
கானகத்தில் கானம்
பாடும்
கருங்குயில் சப்தம் நீ..
மழை நேரம்
மலை மீதில்
படர்ந்திருக்கும்
கார் முகில் நீ..
மண் மீதோடும்
நதி நீ..
வான் மீதாடும்
மதி நீ..
கடல் தாண்டி
கரை தீண்டும்
அலை நீ..
எங்கும்
உலவி அலையும்
வான் நீ...
பூக்களின் வாசம்
பூமியின் சுவாசம்
காற்றின் மொழி
கடவுளின் கவிதை
நீ .. நீ.. நீ..
இயற்கை
இறையின்
கை...
