STORYMIRROR

Radha Radha

Others Children

3  

Radha Radha

Others Children

தம்பி என்கிற தந்தை

தம்பி என்கிற தந்தை

1 min
160

அம்மாவின் பக்கத்தில் யார் தூங்குவது என்று எப்போதும் போட்டி தான் எங்கள் வீட்டில்.....


அவன் தம்பி....சிறியவன்.... ஏதுவும் அறியாதவன் என்று எப்போதும் நான் சொல்லியது உண்டு.... அவனை புரிந்து கொள்ள முயற்சி செய்யாத அக்காவாய்...


உண்மையில் அவன் திறமையை அறிந்தேன்... அவன் 2 வருடத்திற்கு பின் நடக்கும் தேர்விற்கு இரவு 2 மணி வரை படித்து இந்த போட்டியான உலகில் அரசு பணியாளராக தேர்வானதை நான் நினைத்து பார்த்த பொழுது...


உண்மையில் அவன் பாதுகாப்பவன்... சாலையில் நடந்து செல்லும் போது என் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு நடந்ததை நினைத்துப் பார்க்கும்போது...


உண்மையில் அவன் அன்பானவன்....எனது மாதவிடாய் காலங்களில் எவ்வித முகமாற்றங்களும் இல்லாமல் எனக்கு உதவியதை நினைத்துப் பார்க்கும் போது....


உண்மையில் அவன் அழகானவன் என் 6 மாத குழந்தையை நெஞ்சோடு சாய்த்து உறங்க வைத்துக் கொண்டிருக்கும் போது... 


அப்போது புரிந்தது தந்தை வழியில் பிறந்து தம்பி என்கிற தந்தை பாதுகாப்பில் வளர்கிறோம் என்று.....



Rate this content
Log in