மகளிர் தின சமர்பனம்
மகளிர் தின சமர்பனம்
நான் நேசித்த முதல் பெண், காலையிலிருந்து அவளின் பணி ஆரம்பம், சூரியனுக்கே காலை வணக்கம் கூறி அவளின் நாளை துவங்குவாள்! வீட்டீல் உள்ள ஒவ்வொருவரின் தேவைக்காக ஓயாது ஓடித்தான் விடுகிறாள் எங்களின் பின்னே, ஓட்டப்பந்தயம் வைத்தால் அவளுக்கே முதல் பரிசு, உடம்பு சுகமில்லை என்றாலும் முகத்தில் புன்னகை மட்டுமே பூப்பாள் எங்களின் ஆசைகளை கேட்காமல் நிறைவேற்றும் எங்களின் தெய்வம் அவள் தான், வளர்ந்து விட்ட போதிலும் இன்றும் எங்களை குழந்தையாகவே பார்த்துக்கொள்ளம் அவளின் குழந்தை மனது, அவளைப் பார்த்தே வியப்படைந்தேன் பெண்ணுக்குள் இவ்வளவு அதிசயமா, உன் அன்பில், உன் மேல் காதல் கொண்டேன், என் வாழ்வில் அனைத்துமாய் மாறி போன என் அன்னைக்கே இந்த மகளிர் தினத்தை சமர்பிக்கிறேன்