STORYMIRROR

# LIGHTS OFF

SEE WINNERS

Share with friends

 

அச்சுருத்தும் இரவுகள்.

 

வணக்கம், தமிழ்ச் சமூகமே.உங்கள் அனைவரையும் STORYMIRROR மூலம் வந்தடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

 

நம் அனைவருக்கும் திகில் மற்றும் மர்மம் சார்ந்த கதைகளைப் படிப்பது மிகவும் பிடித்தமான செயல்களுள் ஒன்று.அதுவும் இதயத்துடிப்பை நிறுத்தி,உடல் சிலிர்த்து,இரத்தம் உறைய வைக்கும் சில திகில் கதைகளைப் படிக்கும்போது கிடைக்கும் அனுபவம் இரவில் மிதமாக பிரதிபலிக்கும்.இரவின் தனிமையில் நம்மை சுற்றி ஏதோ சில அமானுஷ்ய நிகழ்வுகள் நடப்பதாகத் தோன்றும்.குளிரும் இரவில் போர்வையை தாடை வரை போர்த்தி கண்களை மூடி  தூங்கவும் முடியாமல் கதவிற்குப் பின்னால் ஏதோ கருகிய உருவம் போல சில பிரம்மைகளும் தோன்றும்.ஒரு சிறந்த திகில் கதை கொடுக்கும் அனுபவமே இவையெல்லாம்.

 

இதுபோல பட்டித்தொட்டி எங்கும் உள்ள சிறந்த கதைகளை எழுதிப் பகிரவும் அந்தக் கதைகளைப் படிக்கவும் அற்புதமான மேடையை STORYMIRROR என்னும் செயலி உருவாக்கிக் கொடுத்துள்ளது.இது ஒரு எழுத்துப்போட்டி.

 

இப்போட்டி ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, ஒடியா, பங்களா, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய 10 மொழிகளில் நடைபெற உள்ளது.

 

நீங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம்.இதற்கு அனுமதி இலவசம்.

 

விதிகள்:

  • கதைகள் திகில்(HORROR)வகையைச் சார்ந்ததாக மட்டும் தான் இருக்க வேண்டும்.
  • கதை வடிவிலும், செய்யுள் வடிவிலும் இருக்கும் படைப்புகளை மட்டுமே சமர்பிக்க வேண்டும்.கட்டுரை வடிவில் மட்டும் இருக்கக்கூடாது.
  • போட்டி நடைபெறும் சுட்டியில்(LINK) மட்டும் தான் அனுப்ப வேண்டும்.
  • ஒருவர் எத்தனை படைப்பை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
  • படைப்பாளர்கள் தங்கள் சொந்த படைப்பை மட்டுமே போட்டிக்கு அனுப்பவேண்டும்.

 

பரிசுகள் :

  • சிறந்த பத்து கதைகளையும் மற்றும் செய்யுள்களையும் அனுப்பிய படைப்பாளர்களுக்கு இந்தியாவின் தலைசிறந்த(Excellence) எழுத்தாளர் என்ற சான்றிதழ்(CERTIFICATE) ஸ்டோரமிர்ரர் மூலம் வழங்கப்படும்.
  • ஸ்டோரிமிர்ரர் சிறந்த பத்து கதைகளையும் செய்யுள்களையும் மின்நூலாக(e-book) தொகுத்து வழங்கும்.
  • தமிழ் மொழியில் சிறந்த மூன்று படைப்புகளுக்கு 250ரூபாய் மதிப்பிலான ரசீது (voucher)வழங்கப்படும்.அந்த ரசீதை வைத்து https://shop.storymirror.com ல் அத்தொகைக்கான புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம்.
  • ஒவ்வொரு மொழியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு மூன்று பேருக்கு ஸ்டோரிமிர்ரரின் இணையதளத்தில் கோல்டு,சில்வர் மற்றும் காப்பர் என்ற உறுப்பினர்(membership)அடையாளத்தை வழங்கும்.
  • இப்போட்டியில் வெற்றியார்களை வெளிப்படையாகத் தேர்வு செய்யப்படுவர்.
  • செப்டம்பர்  19,2019 வரையிலான
  1. ஆசிரியரின் மதிப்பெண்கள்.
  2. மொத்த பார்வைகள்.
  3. மொத்த விருப்பங்கள்.
  4. கருத்துக்கள் மற்றும் மதிப்பீடுகள் இவை அனைத்ததையும் வெற்றியாளர்களை தேர்வு செய்ய கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

 

படைப்புகளை சமர்பிக்க வேண்டிய காலம்:

 

ஆகஸ்ட் 23,2019 - செப்டம்பர் 5,2019 வரை.இதற்கு மேல் வரும் படைப்புகள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

போட்டியின் முடிவு : செப்டம்பர் 20,2019.

 

மொழிகள்: தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி, குஜராத்தி, ஒடியா, பங்களா, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்.

 

படைப்பு வகை : கதை,செய்யுள்.

தொடர்புகொள்ளmarketing@storymirror.com/ 022-49243888 / 022-49240082