வெற்றி நிச்சயம்
வெற்றி நிச்சயம்


ஒரு சமயம் ஒருஅழகான பசு கன்றை ஈன்றது.அந்த கன்றை மிகவும் பாசத்துடன் வளர்த்தது அது எங்கும் செல்லாத படி தன் அருகிலேயே வைத்திருந்தது பசு எங்கே புல் மேயச் சென்றாலும், கன்றும் அதனை ஒட்டியே செல்லும். ஒரு முறை மழை காலம்.பசு புல் மேயச் சென்றபோது பசுவை ஒட்டியே கன்றும் சென்றது.புல்வெளியில் இடையே தண்ணீர் தேங்கி நின்றதால் ,புல்வெளியில்மழை காலத்தினால் மண் சேரும் சகதியுமாக இருந்ததுஅருகில் இருந்த குளத்தில் கன்று விழுந்து விட்டது .அதனால் வெளியே எழுந்து வர முடியவில்லை மழைக்காலம் ஆதலால் மிகவும் சகதியுமாக இருந்தது சுற்றி நின்ற மற்ற எல்லா கால்நடைகளும் கன்றை வேடிக்கை பார்த்ததே தவிர யாரும் உதவிக்கு முன்வரவில்லை. மாலை நேரம் நெருங்கியதால் மிகவும் இருட்டாக மாறியது. எல்லா கால்நடைகளும் தன் வீட்டிற்கு திரும்ப சென்றுவிட்டன அப்போது கன்று தான் இன்னும் சற்று நேரத்தில் இறந்து விடுவோம் என்று நினைத்ததுஆனாலும் முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு இணங்க இந்த தன் கால்களை உதைத்துக் கொண்டே இருந்தது. இரு கால்களையும் வேகமாக உதைத்த போது குளத்தின் கரை தட்டுப்பட்டது .எனவே அதில் முன் கால்களை ஊன்றிக் கொண்டு பின் கால்களைஅது விரைவாகவும் வேகத்துடனும் இழுத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது.துன்பம் வருவது பெரிய விஷயம் அல்ல ..அந்த நேரத்தில் நாம் சற்று சிந்திக்க வேண்டும்.நம் நம்பிக்கை இழக்காமல் முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம்.