தைரியம்
தைரியம்


ஒரு ஊரில் ஒரு அரசன் இருந்தார்.
அவர் தினமும் காலையில் சூரியனை வணங்கிய பிறகே தன் வேலையை துவங்குவார்.
ஒருநாள் காலை வழக்கம் போல சாளரம் வழியாக கிழக்கே நோக்கினார்.
ஆனால் அங்கே ஒரு பிச்சைக்காரன் முகம்தான் தோன்றியது.
சூரியனைப் பார்க்க முடியவில்லை.
அரசருக்கு கடுங்கோபம்.
நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கடும் கோபமுற்ற அரசன்
தூக்கில் இட அந்த பிச்சைக்காரனை இழுத்து வரச் சொன்னார்.
பணியாட்களும் பிச்சைக்காரனை இழுத்து வந்தனர்.
அரச சபை கூடியது.
தன் காயத்துக்கு காரணமாகிஇருந்த பிச்சைக்காரர
ை தூக்கில் இட கட்டளையிட்டார்.
பிச்சைக்காரன் கடகடவென சிரித்தான்.
அதைப் பார்த்த அரசருக்கு கோபம் பொங்கியது .
ஏன் சிரிக்கிறாய் என்று கேட்டார்.
அதற்கு பிச்சைக்காரன் சொன்னான். பிச்சைக்காரன் என்னைப் பார்த்ததால் உங்களுக்கு சிறுகாயம் பெற்றது வாஸ்தவம்தான். ஆனால் மகாராஜாவாக உங்களைப் பார்த்த எனக்கு என் தலையே போகப்போகிறது. என் உயிரே போகப்போகிறது. என்ன செய்ய என்று சிரித்தான். அதைக் கேட்ட ராஜா வெட்கி தலை குனிந்தார்.
அவனுக்கு மன்னிப்பு வழங்கினார்.
தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்