பூனை
பூனை


ஒரு காட்டில் ஒரு முனிவர் இருந்தார் அவர் சதா தவம் செய்து கொண்டே இருப்பார்
அவர் மிகவும் சக்தி வாய்ந்தவர்.
மிகுந்த இரக்க குணம்கொண்டவர்.!
அவர் காய், கனி மட்டுமே உண்டு ஜீவித்து வந்தார்.
ஒரு நாள் ஒரு பூனை அவர் குகைக்கு வந்தது வந்தது.
அது எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. அவரும் அன்புடன் உ னக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்?
மிகவும் அன்புடன் பூனையை உபசரித்தார்.
இந்த பூனையை ஒரு நாள்நரி துரத்தியது.
எனவே அடைக்கலமாக முனிவரிடம் வந்தது.
முனிவரும் சில மந்திரங்களைசொன்னார்.
உடனே அந்தப் பூனை நரி யாக மாறியது.
இவ்வாறு பல சந்தர்ப்பங்களில் பூனையை பலவிதமாக மந்திர உச்சாடனம்செய்து
பலவித விலங்குகளாக மாற்றி,அதன் உயிரை காப்பாற்றினார்.
கடைசியில் அந்தப் பூனை காட்டு ராஜாவாக மாற எண்ணியது.
எனவே முனிவரிடம் என்னை காட்டு ராஜாவாக மாற்றுங்கள் என்றது.
அவரும் அதை சிங்கமாக மாற்றினார்.
மாற்றியது தான் தாமதம். உடனே அடித்து கொன்று முனிவரை சாப்பிட வந்தது.
உடனே முனிவரும் சுதாரித்துக் கொண்டு சில மந்திரங்களை ஓதவும்
அது ஒரு கிழட்டு பூனையாக மாறியது.
பாவம் பூனை செய்வது அறியாது திகைத்து நின்றது.
வந்த வழியை மறக்கக்கூடாது .
கர்வம் கர்வம் தலைக்கு ஏறினால் வாழ்க்கையை இழக்க நேரிடும்.
….