புத்தி
புத்தி


ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். .அவன் உப்பு வியாபாரம் செய்து வந்தான். அவனிடம் ஒரு கழுதை இருந்தது. அந்த கழுதையிடம் அவன் மிகுந்த அன்பாக இருந்தான்.
அந்தக் கழுதை பல வருடங்களாக அவனிடம் வேலை பார்த்து வந்தது.
ஒருநாள் வியாபாரி பக்கத்து ஊருக்கு உப்பு மூட்டையை ஏற்றிக் கொண்டு சென்றான்.
செல்லும் வழியில் ஒரு சிறு ஆறு குறுக்கிட்டது.
அப்போது அவ்வழியாக சென்ற கழுதைக்கு கால் சற்றே சறுக்கியது.
அதனால் கழுதை கீழே விழுந்துவிட்டது. கழுதை கீழே விழுந்ததால் உப்பு தண்ணீரில் கரைந்து காலியாகி …வெறும் சாக்கு மட்டும் அதன் முதுகில் இருந்தது.
கழுதை முதுகில் பாரம் இல்லை.
இப்போதுகழுதைக்கு மிகவும் சுகமாய் இருந்தது.
அடடா இத்தனை நாள் நான் ஏமாந்து விட்டேனே .
இவ்வளவு கஷ்டப்பட்டு சுமந்தேனே.
எவ்வளவு எளிமையாக இருக்கிறது .என்று மனதில் நினைத்து.
பிறகு ஒரு வாரம் வரை இதேபோல் கழுதை வேண்டுமென்றே நதியை கடக்கும் போது உப்பு மூட்டையை தண்ணீரில் போட்டது.
ஒரு மாதத்திற்கு பிறகு தான் அந்த வியாபாரிக்கு புரிந்தது கழுதை வேண்டுமென்றே செய்கிறது என்று .
அவன் யோசித்தான்.
. இந்தக் கழுதையை எப்படி திருத்துவது என்று.
அதனால் ஒரு மூட்டை கழுதையின் முதுகில் ஏற்றினான்.கழுதை அன்றும் வேண்டுமென்றே தண்ணியில் சறுக்கி விழுவதுபோல் விழுந்தது. தண்ணீரில் விழுந்த பஞ்சு மூட்டை மிகவும் கனமாக கழுதை சுமக்க முடியவில்லை. நிஜமாகவேஆனாலும் வியாபாரி கழுதையின் முதுகில் குச்சியால் அடித்து விரைந்து செல் என ஆணையிட்டான். கழுதைக்கு அப்போதுதான் புத்தி வந்தது.