பேராசை
பேராசை


ஒரு எலி மிகவும் பசியால் துடித்து மிக மெலிந்து போய்விட்டது.
அந்த எலிக்கு எந்த உணவும் கிடைக்கவில்லை.
சுற்றி முற்றும் பார்த்தது .
உணவே இல்லை.
கடைசியாக அரிசி
நிரப்பப்பட்ட ஒரு கூடையை கண்டுபிடித்தது !
கூடையில் வாய் மூடப்பட்டு இருந்தது.
கூடையில் ஒரு சிறிய துளை இருந்தது.
எலி அதை பார்த்ததும் அந்த துளை வழியாக உள்ளே நுழைந்தது.
பின் வேண்டிய மட்டும் சாப்பிட்டது.
மிகவும் பசியாக இருந்ததால் வயிறு நிறைய, வயிறு புடைக்க சாப்பிட்டது. எக்கச்சக்கமாக தின்று விட்டதால், மிகவும் தடிமனாக ஆகிவிட்டது.
கூடையில் இருந்து வெளியேற முடியவில்லை.
உடல் பெருத்து விட்டதால் என்ன செய்வது என்று புரியவில்லை .
நான் எப்படி வெளியேறுவேன்.
வெளியில் இருந்து மற்றொரு எலி கூறியது. கூடையில் இருந்து வெளியேற வேண்டுமானால் நீங்கள் உள்ளே செல்லும்போது மெல்லிதாக இருந்தீர்கள் .உடல் மெலிந்தால் தான் கூடையில் இருந்து வெளியே வர முடியும்.
அதுவரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் வெளியே வர முடியும் என்றது.
ஆனால் உள்ளே கூடை க்குள் இருந்த
எலியோ மறுபடியும் மறுபடியும் வயிறு புடைக்கத் தின்று, தின்று தின்று குண்டானது.
பிழைக்க மெல்லியதாக வில்லை.
ஒருநாள் கூடையை திறந்த எஜமானன் எலியை கண்டு அடித்துக் கொன்றான்.
பேராசை பெருநஷ்டம்