ஒரு சிறுவன் உயர்ந்த கதை
ஒரு சிறுவன் உயர்ந்த கதை
- ஒரு நாள் ஒரு பெரியவர் ஒருவருக்கு தீர்க்க முடியாத நோய் வந்தது. அந் நோயை குணப்படுத்துவதற்காக நகரத்தில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந் நோய் இப் பெரியவரின் உயிரை எடுக்கும் அளவிற்கு கொண்டு போய் விட்டது. அப்படி இருந்ததால் அவர் அவ் வைத்தியசாலையில் பல நாட்கள் இருக்கும் தேவை ஏற்பட்டது. அப்படி இருந்து எப்படியோ அப் பெரியவரின் நோய் நீங்கியது. அப் பெரியவர் குணமாகியதும் அவ் வைத்தியரை பார்த்து நன்றி சொல்ல ஆசை பட்டார். அப்படி அவ் வைத்தியனை பார்த்தவுடன் இவருக்கு மிகவும் அதிர்ச்சி அது மாத்திரமல்லாமல் எல்லை கடந்த சந்தோஷம் .இவரைப் பார்த்த வைத்தியனும் ஒருவகையாக புன்னகித்து நன்றி சொல்லி அழுது கொண்டிருந்தான். பெரியவரின் குடும்பத்தார்களுக்கு யார் இவன். இவருடன் ஏன் இப்படி நெருக்கமாக இருக்கிறான்? இவர்களுக்கிடையே என்ன தொடர்பு இருக்கும் என மாறி மாறி கேட்டு குழப்பத்துடன் நின்று கொண்டிருந்தார்கள். இவர்கள் குழம்புவதை பார்த்த வைத்தியன் தான் யார் என்று சொல்ல ஆரம்பித்தான்.
25 வருடங்களுக்கு முதல்...
எனது பெயர் kiddo. எனக்கு சிறு வயது இருக்கும் பொழுதே என் அம்மா உயிரிழந்து விட்டாள். அம்மா இல்லாத துயரத்தை என் அப்பா தான் நீக்கினார். ஆனால் அப்பாவுடன் இருக்கும் பாக்கியத்தை கூட அக்கடவுள் தரவில்லை. என் அப்பாவும் உயிரிழந்து விட்டார். அம்மாவின் அன்புமல்லாமல் அப்பாவின் பாதுகாப்பும் இல்லாமல் ஒரு அனாதையாக இருந்தேன். அத்தருணம் என் குடும்பம் என்னை வெறுத்து தாழ்த்தி பேசினார்கள். ஆனால் என் பாட்டி தான் என்னை பாதுகாத்து வந்தாள். அதன் பிறகு நான் பாடசாலை சென்றேன். அங்கே நான் அனாதை என்று தெரிந்தும் கூட என்னை மனம் வருந்த செய்தார்கள். அந்த நொடிகளில் எனக்கு படிப்பதற்கு கூட அருவருப்பாக இருந்தது. அது மாத்திரமல்லாமல் பாடசாலைக்கு அணிந்து செல்ல ஆடை,உண்பதற்கு நல்ல உணவு கூட இல்லை. அச் சமயத்தில் என் மனம் உடைந்து நான் கவலையுடன் இருக்கும் பொழுது என் கவலையை அறிந்து என்னுடன் பக்கபலமாக இருந்தது என் நண்பன் தான்.அவனை நான் அன்றும் இன்றும் என்றும் மறக்கவே மாட்டன்.அப்படி என் வாழ்க்கை துயரத்துடன் நகர்ந்தது. எப்படி என் வாழ்க்கை சென்றாலும் கூட படிப்பதற்கு ஒரு துளி கூட மனம் வந்ததில்லை. ஒரு நாள் நானும் எனது நண்பனும் ஒரு வேலையாக சென்று கொண்டிருந்தோம்.அவ் வழியில் ஒரு சிறுவன் பிச்சை எடுப்பதை கண்டேன். அச் சிறுவனை கண்ட நான் மிகவும் பரிதாபத்துடன் சற்று நேரம் அவ் இடத்தில் நின்று ஒன்று யோசித்தேன்.என்னெவென்றால் இவர்களும் நம்மை போன்று அநாதையாக இருக்கின்றார்கள். நான் இப்பொழுது விரும்பாத அக் கல்வியை கஷ்டப்பட்டு படித்து ஒரு அரசாங்க வேலையில் இருப்பேன் என்றால் என்னைப்போல் கஷ்டப்படும் அனைத்து அநாதை பிள்ளைகளுக்கு தேவையான எல்லாவற்றையும் நான் இலவசமாக செய்து வைப்பேன். அது மாத்திரமல்லாமல் என்னை கீழ்படுத்திய என் வகுப்பு மாணவர்கள்,உறவினர்கள்,ஆசிரியர் அனைவருக்கும் நான் யார் என்று காட்டும் நாள் வரும் என்று நினைத்தபடி அவ் இடத்தை விட்டு சென்றேன். அப்பொழுது என் நண்பன் நீ உன் உறவினர்,ஆசிரியர் மற்றும் மாணவர்கள் எல்லாரும் உன்னை மனதளவில் கஷ்டப்படுத்திய போது வராத அந்த துணிச்சல் இப் பொழுது அச் சிறுவனை பார்த்தவுடன் எப்படி வந்தது.என்று கேட்டான். அதற்கு நான் நம்மை போன்றவர்கள் நம்மலை போன்று கஷ்டப்படும் போது தான் இப்படி கவலை, தைரியம், வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கமும் வரும். அப்படி எனக்கு வந்து இருக்கிறது. என்று கூறி விட்டு என் வீட்டுக்கு சென்று விட்டேன். அப்படி வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு குறிக்கோளோடு நான் என் இலக்கை நோக்கி நகர்ந்தேன். அதன் பிறகு எனக்கு யார் என்ன சொன்னாலும் கண்டுப்பது இல்லை.அப்படி பல நாட்கள் ஓடின. பரீட்சை நெருங்கியது. பரீட்சைக்காக வேண்டி இரவு பகலாக படித்தேன். பரீட்சை எழுதி முடித்து விட்டு நல்ல பெறுபேறுகள் வரும் என்று தன்னம்பிக்கையுடன் இருந்தேன். அப்படி பல மாதங்கள் நகர்ந்தன. பெறுபேறுகளும் வெளியாகின. தன்னம்பிக்கையுடன இருந்த நான் பெறுபேறுகளை பார்ப்பதற்காக சென்றேன். நினைத்தபடி அப் பரீட்சையில் வெற்றி பெற்று விட்டேன். அப்போது ஒரு சிறு யோசனை வந்தது "நம்பிக்கையை விட தன்னம்பிக்கை உயர்ந்தது என்று". ஆனால் நான் வெற்றி பெற்ற சந்தோஷம் குறைவாக இருந்தது. ஏன் என்றால் இச் சந்தோஷமான நேரத்தில் என் அப்பா,அம்மா என் பக்கத்தில் இல்லை. அது மாத்திரமல்லாமல் இன்னும் படிக்க வேண்டும் என்றால் இன்னும் அதிக பணம் தேவைப்படும். எனக்கு யார் பண உதவி செய்வார் என்று ஒரு யோசனை. பணம் இல்லாவிட்டால் என் கனவு கனவாகவே போய் விடும் என்று ஒரு கவலை. அப்படி இடிந்து போய் நான் இருக்கும் பொழுது என் நண்பன் எனக்கு ஆறுதல் கூறினான். அச் சமயத்தில் தான் எனக்கு உதவி செய்வதற்கு உங்கள் அப்பா, என் ஆசிரியர், அதாவது நம் முன்னால் நிற்கும் இப் பெரியவர். இவர் எனக்கு பக்கபலமாக இருந்தார். நான் மேல்படிப்பு படிப்பதற்காக செலவு செய்தார். எனக்கு கிடைத்த அச் சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் பயன்படுத்தி நன்றாக படித்து உங்கள் முன்னால் ஒரு வைத்தியனாய் நின்று கொண்டிருக்கிறேன். அது மாத்திரமல்லாமல் நான் நினைத்தபடி அனாதை பிள்ளைகளை என் செலவில் பராமரித்து வருகின்றேன். பிறகு என்னை முட்டாள் என்று கூறியவர்கள் முன்னால் நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்.
இதை கேட்ட அப் பெரியாரின் குடும்பத்தினர் அவனின் துணிச்சல்,முயற்சி,தைரியம் என்பவற்றை பாராட்டினர். அது மட்டுமல்லாமல் பெரியவரின் உயிரை காப்பற்றியதற்காக அவனுக்கு நன்றி செலுத்தி விட்டு சென்றனர்.
குறிப்பு>> நாம் நம் கஷ்டத்தை கண்டு துவண்டு விடக்கூடாது. அதற்கு எதிராக போராட வேண்டும். அப்பொழுது தான் வாழ்வில் வெற்றி நிச்சயம்<<
The motivated story
Written by>>Raheem binth fatheema rana<<
