anuradha nazeer

Children Stories

5.0  

anuradha nazeer

Children Stories

ஓநாய்

ஓநாய்

1 min
746


ஒரு சமயம் ஒரு பசித்த ஓநாய் ஒரு கொழுத்த ஆட்டை பார்த்தது. .பார்த்ததுமே மனதில் அந்த ஆட்டை தின்று முடிக்க ஓநாய் ஆசைப்பட்டது.அடித்துக் கொன்று தின்றது

அதை பார்த்து ஆடு தன் உயிரை கையில் பிடித்து ஓடத்துவங்கியது .ஆனாலும் ஓநாய் ஆடை அடித்துக் கொன்று தின்றது.

தடித்த பலமான எலும்பு ஓனாய் தொண்டையில் சிக்கி காயப்படுத்தியது

ஓநாய் தொண்டையில் எலும்பு சிக்கியது. அது உள்ளே செல்லாமல் வெளியே வராமல் ஓநாய் தொண்டையை புண்படுத்தியது .

அப்போது சற்று அருகாமையில் ஒருநாரையை பார்த்தது ஓநாய்.

இந்த நாரை நம் தொண்டையிலிருந்து எலும்பை அகற்றி விடும். .நாரை தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள நினைத்தது.

நாரை பறக்க ஆரம்பித்தது.

அதற்குள் ஓநாய் நண்பனே நான் உன்னை கொன்று தின்ன மாட்டேன். பயப்படாதே. என் தொண்டையில் எலும்பு சிக்கி ஆபத்தான நிலையில் உள்ளேன் .அதை அகற்றி விட்டால் உனக்கு அருமையான பரிசு ஒன்று நீ மகிழும்படி தருவேன் என்று ஓநாய் கூறியது .ஓநாய் வாயை அகலத் திறந்து காட்டியது நாரை இடம் .நாரையும் தன் நீண்ட அ லகினால் எலும்பை அப்புறப்படுத்தியது.

அதை நம்பிய நாரையும் ஓநாய் தொண்டையிலிருந்து எலும்பை அகற்றியது. எலும்பை நாரை அகற்றியதும் ஓநாய் நகர ஆரம்பித்தது .

உடனே நாரை எங்கே பரிசு என்று கேட்டது .

உன்னை உயிரோடு நான் விட்டதே மிகப்பெரிய பரிசு.

மரியாதையாக இங்கிருந்து சென்று விடு. இல்லையேல் உன்னைக் கொன்று தின்று விடுவேன் என்றது.

கெட்டவர்களுக்கு நாம் சேவை செய்தால் ஒருபோதும் பரிசை எதிர்பார்க்கக்கூடாது


Rate this content
Log in