anuradha nazeer

Children Stories

5.0  

anuradha nazeer

Children Stories

நண்டு

நண்டு

1 min
549


ஒரு நண்டு கடற்கரை மணலில் நடந்து சென்றது.

சற்று தூரம் சென்றதும் திரும்பி பார்த்தது.மணலில் 

அழகழகானதான் நடந்து வந்த சுவடுகளை

பார்த்து அதுவே பூரிப்பு கொண்டது.


இன்னும் சற்று தூரம் சென்றது திரும்பி பார்த்தது.

ஆனால்    அந்த  சுவடுகளை   கடல் அலைகள் வந்து அடித்துச் சென்றுவிட்டது.

அதனால் கடும் கோபமடைந்த நண்டு கடல் அலைகளை உன்னை நண்பன் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தேன்.


இப்படி துரோகம் செய்து விட்டாயே. எதற்காக என் காலடிச் சுவடுகளை அழித்து விட்டாய்? என்று கோவமாய் கேட்டது. அதற்கு கடலலைகள் நான் உன்னை நண்பனாக தான் நினைக்கிறேன் .

சற்றே திரும்பிப்பார். 

மீன் பிடிப்பவன் வந்துகொண்டு இருக்கிறான் .


 அவன் உன் காலடி தடங்களை பார்த்து உன்னை பின் தொடர்ந்து வந்து உன்னை பிடித்துச் சென்று விடுவான் அல்லவா? அதற்காகத்தான் நண்பனே உன் தடங்களை அழித்து உன்னைக் காப்பாற்றினேன் என்றது.

ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டல்லவா ?

அதனால் நாம் யார் செய்யும் காரியத்தையும், அதன் பலன் என்ன என்று தெரிந்து தான் நாம் அவர்களை திட்ட வேண்டும்.


Rate this content
Log in