நண்பர்கள்
நண்பர்கள்


ராமுவும் சோமுவும் நல்ல நண்பர்கள். ஆனால் இருவருமே மிக ஏழைகள்.
கஷ்டப்பட்டு கொண்டு இருப்பவர்கள்.
என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதனால் நடைபாதையில் உள்ள ஒரு கிளி ஜோசியரிடம் இருவருமே சென்று எதிர்காலம் பற்றி கேட்டார்கள்.
அந்த கிளி ஜோசியம் சொன்னான் இன்று உங்கள் இருவருக்கும் அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது.
இதைக் கேட்ட இருவரும்அவன் கூறியதை அப்படியே நம்பி விட்டார்கள்.
அங்கு சென்றதும் ஒரு பணப்பை கிடைத்தது.
ராமு தான் அதை கண்டு எடுத்தான். சோமுவும் உடன் இருந்தான்.
ராமு பெருமையுடன் சொன்னான்.
எனக்கு அதிர்ஷ்டம் அடித்துவிட்டது.
நான் இன்று முதல் பணக்காரன்.
எனக்கு பாக்கியம் கிடைத்து விட்டது.
உடனிருந்த சோமு சொன்னான் நமக்கு என்று சொல்லு.
உனக்கு என்று ஏன் பிரித்துப் பேசுகிறாய் என்றான்.
அதற்கு ராமு இல்லை இல்லை பணப்பையை நான்தானே கண்டெடுத்தேன்.
அதனால் இது எனக்கு சொந்தம்.
நான் தான் அதிர்ஷ்டசாலி என்று கூறிக்கொண்டே மிக விரைவில் மிக விரைவாக நடந்தான்.
பின்னாலேயே சிலபேர் துரத்திக்கொண்டு வரும் சப்தம் கேட்டது.
என் பணப்பை இங்கேதான் எங்கோ விழுந்திருக்கும் .
தேடுவோம் என்று சிலர் கூட்டத்துடன் வந்து கொண்டு இருந்தனர்.
உடனே சொன்னான் சோமு எனக்கு பயமாக இருக்கிறது.
நம் இருவருக்கும் இப்போது உதை கிடைக்கப்போகிறது.
தப்பிச் சென்று விடலாம் என்றான்.
கஷ்டம் என்றால் இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சுகம் என்றால் நீ மட்டும் எடுத்துக் கொள்வாயா என்று கேட்டான்.
இதில் எனக்கு உடன்பாடு இல்லை. சற்றுமுன் நீ தானே கூறினாய் எனக்கு பாக்கியம் கிடைத்திருக்கிறது. இன்று முதல் நான் பணக்காரன் என்று .
அவர் சொன்னதையே திருப்பிச் சொன்னான்.
நாம் எப்போதுமே நம் சொற்களில் தெளிவாக எச்சரிக்கையாக வேண்டும்.
நாம் என்ன சொல்கிறோமோ அதை செய்ய வேண்டும்.
என்ன செய்யப்போகிறோம் அதை சொல்ல வேண்டும் .