நேர்மை தந்த பரிசு
நேர்மை தந்த பரிசு


ஓர் ஊரில் நான்கு சகோதரர்கள் தம் தாய் தந்தையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். அவர்கள் பெற்றோர்கள் கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். அந்த நால்வரும் பள்ளியில் படித்து வந்தனர். அவர்கள் நன்றாக படிக்கும் இயல்புடையவர்கள்.
அவர்களிடம் ஒலிக்கடிகை இல்லை. எனவே காலையில் விழித்து எழுவதற்காக ஒவ்வொரு நாளும் சகோதரன் இரவு முழுவதும் விழித்திருப்பான், அப்பொழுது ஒரு நாள் அவர்கள் பள்ளி பாடத்தில் ஒலிக்கடிகைப் பற்றி படிக்கிறார்கள். தாமும் ஓர் ஒலிக்கடிகையை வாங்க வேண்டும் என்று உறுதி கொள்கின்றனர். இவ்வாறு சிந்தித்துக்கொண்டே வரும்பொழுது கீழே ஒரு கடிகாரம் கிடப்பதைக் கண்டனர்.
அந்தக் கடிகாரத்தை எடுத்த அவர்கள் பலவாறு சிந்திக்கின்றனர். தாமே வைத்துக்கொள்ளலாமா? அல்லது கடையில் விற
்றுவிடலாமா ? என்றெல்லாம் யோசிக்கின்றனர். அன்று காலையில், தமிழாசிரியர் நடத்திய பாடத்தில் நேர்மையும் உண்மையும் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய பண்புகள் என்று கற்பித்ததை நினைவு கூறுகின்றனர்.
இறுதியில் அந்தக் கடிகாரத்தை தங்கள் ஆசிரியரிடம் கொடுக்கலாம் என்று முடிவு செய்து ஆசிரியரின் வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறி, அக்கடிகாரத்தை உரியவரிடம் ஒப்படைக்க என்ன செய்ய வேண்டுமெனக் கேட்கின்றனர். அவர்களின் நற்குணத்தைப் பாராட்டிய ஆசிரியர், மறுநாள் அவர்களைச் சந்திப்பதாகக் கூறினார்.
மறுநாள், அக்கடிகாரத்தைக் காவல்நிலையத்தில் கொடுத்து உரியவரிடம் ஒப்படைத்தனர். உரிமையாளர், அவர்களின் நேர்மையைப் பாராட்டி அவர்களுக்கு புது ஒலிக்கடிகை வாங்கிக் கொடுத்தார்.
நீதி : நேர்மையும் உண்மையும் வாழ்வில் உயர்வதற்கான பொன்னான வழிகள் .