மலர்கள்
மலர்கள்


ஒரு தோட்டத்தில் அழகழகான மலர்கள் பூத்து மனதைக் கவர்ந்தது.
அதனைப் பார்த்த அனைவருமே என்னமா வண்ண வண்ண. பூக்கள் வசந்தத்தில் பூத்திருப்பது போலிருக்கிறதே என்று மெச்சினர்.
வசந்தமும் சென்றது.அந்த மலர்களுக்கு மத்தியில் அழகான ரோஜாவும் இருந்தது .எல்லோரும் ரோஜாவை அற்புதமாக பாராட்டினர். ரோஜாவிற்கு. செ றுக்கு. உண்டாயிற்று.
தலைக்கணம் மட்டும் வரவே கூடாது .
அறிவித்து தனது காரணம்
செருக்கு கொண்ட ரோஜா மலரை மற்ற மலர்கள் வெறுத்து ஒதுக்கியது
இடம் தான் என்பதை அழகாக இருக்கிறேன் என்று வீண் ஜம்பம் அடித்துக் கொண்டது ரோஜா அதைக்கேட்ட மலர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு என்று கூறியதுஆனால் ரோஜா இதை ஏற்க மறுத்ததுரோஜாவின் ஆணவத்தால் மற்ற மலர்கள் ரோஜாவை வெறுத்து ஒதுக்கியது .
ரோஜாவுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டது.
ஆனால் ஒரு சப்பாத்திக் கள்ளி மட்டும் ரோஜாவே வெறுக்காமல் அன்புடன் எப்போதும்போல் பழகியது.
வசந்தம் முடிந்தது பின் இலை யுதிர் காலம் வந்தது.
அப்போது ரோஜாவின் அழகு மெல்ல தேய ஆரம்பித்தது.
இலைகள் எல்லாம் உதிர்ந்து. காய்ந்து போனது போல் ரோஜாவின் குச்சிகள் அசிங்கமாக இருந்தது.
பல குருவிகள் வந்து தனது கூறிய அலகினால் சப்பாத்திக் கள்ளி துளைத்து அதிலிருந்து நீர் பருகி சென்றன.
இதைப் பார்த்த ரோஜா சப்பாத்திக் கள்ளி இடம் உனக்கு வலிக்க வில்லையா?
குருவிகள் அதன் கூர்மையான அலகால் உன்னை குத்திய போது என்று கேட்டது l.
சப்பாத்திக். கள்ளி
வலிக்கத்தான் செய்தது. என்ன செய்வது ?
மற்றவர்கள் சந்தோஷ!மாய் இருப்பதை பார்க்க வேண்டும் என்றால் நாம் வலியை பொறுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று கூறியது.
அதைக்கேட்ட ரோஜா ஞானம் உற்றது.
தனக்கும் தண்ணீர் தேவை என்று சப்பாத்திக்கள்ளி இடம் சொன்னது. . சப்பாத்திக் கள்ளி ரோஜாவிற்கு குருவிகளின் மூலம் அலகால்
தண்ணீர் ஊற்றியது .
ரோஜாவும் செழித்து வளர்ந்தது.
ரோஜாவும் அகந்தை அகன்று தன்னடக்கத்துடன் பொலிவாக விளங்கியது.