ஆகாஷ் காமராஜ்

Others

4.5  

ஆகாஷ் காமராஜ்

Others

கதையல்ல சமூக மாற்றம்

கதையல்ல சமூக மாற்றம்

3 mins
278


வணக்கம் நண்பர்களே,

 இந்த செயலியானது பலருக்கும் பயனுள்ளதாகவும், அவர்களின் திறமையை வெளிப்படுத்த ஒரு மேடையாகவும் உள்ளது.


 மேலும், இது உணர்வுகளின் அடிப்படையாகவும் விளங்கி வருகிறது.

  

  இந்த செயலியில் கதைகள் மற்றும் கவிதைகளை மட்டுமல்லாமல் சமூகத்திற்கு நன்மை பயக்கும் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில்,சமூகம் சார்ந்த எனது கருத்துகள் பின்வருமாறு,

  

 ''சாதி,மதமில்லா பாரதத்தை உருவாக்குவோம்''


  "சாதி" என்ற ஒரு சொல் நம் பாரததேசமான இந்தியாவை ஆட்சி செய்து வருகிறது."மதம்"என்ற ஒற்றை வார்த்தையைக் கூறி ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே இந்தியர்கள் என்று ஒரு கூட்டம் கூறிக் கொண்டிருக்கிறது. கொரோனாவைப் போன்று சாதியை ஒழிக்க முடியவில்லைை என்றாலும் கூட மேலும் வளர விடாமல் தடுப்பதற்கான சட்டங்களை இந்திய அரசு உருவாக்கி நடைமுறைப்படுத்த வேண்டும்.


எவ்வளவு தான் சாதியை ஒழிக்க சட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இன்றளவும் இந்தியாவில் அதிகமாக கிராமப்புறங்களில் மட்டுமே சாதி முறையிலான வாழ்க்கைை முறை நடைபெற்று வருகிறது. அரசு இயற்றும் சட்ட விதிமுறைகள் அனைத்தும் நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கே அதிகமாக தெரியப்படுகின்றன. கிராமப்புறங்களில் போதிய வசதிகள் இன்மையாலும், கிராம மக்களின் அறியாமைகளாலும் சட்ட விதிமுறைகள் சில படித்தவர்களுக்கு மட்டுமே அறியப்படுவதாக அமைந்துள்ளது.


இந்தியாவில் சாதி முறையினைைை அகற்றுவதற்கான சில வழிமுறைகள் பின்வருமாறு,

  • இந்தியாவில் உள்ள அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புற பெயர்களில் சுட்டப்பட்டுள்ள சாதி பெயர்களை அகற்றி மறுஉருவாக்கம் செய்தல் வேண்டும்.
  • தன்னுடைய பெயர்களுக்கு அருகில் மூலம் பெற்ற பட்டத்தை மட்டுமே சேர்க்க வேண்டுமே தவிர, சாதி பெயர்களை சேர்க்கக்கூடாது. எந்த சுவரொட்டிகளிலும், கட்சிக் கூட்டங்களில் பெயர்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும், இரங்கல் பேனர்களிலும் தன்னுடைய சாதியினை பெயருக்கு பின்னால் அடையாளமாக வைக்கக்கூடாது என்று தட்டம் உருவாக்கப்பட வேண்டும். மீறினால், சட்டத்தின் கூறுகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். முக்கியமாக தனது வீட்டின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் சாதி இடம் பெறுதல் கூடாது.
  • உயர் வகுப்பினராகக் கருதப்படும் பணக்காரர்கள் வாழும் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்களாகக் கருதப்படும் ஏழைகள் கோவிலின் உள்ளே செல்வதற்கான அனுமதி இன்றளவும் கிராமப்புறங்களில் மறுக்கப்படுகின்றன அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அவலநிலையை போக்க நமது அரசு அதிகாரப் பூர்வமான செய்திகளை வெளியிட வேண்டும்.
  • எந்தவொரு வாகனத்திலும் சாதி அடிப்படையிலான பெயர்கள் இடம் பெறுதல் கூடாது.
  • இந்தியாவில் சாதியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எந்த ஒரு கட்சியும் தாழ்த்தப்பட்ட மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்கள் அக்கச்சியின் தலைவராக அறிவிக்க அக் கட்சிக்கு எந்த உரிமையும் கிடையாது. அப்படி மாற்றப்பட்ட தலைவர்களை உடனடியாக அக்கட்சியானது அரசிற்கு திருப்பி அளித்து விடவேண்டும் என்று சட்டம் இயற்றப்பட வேண்டும்.
  • இந்தியாவில் நடைபெறும் எந்த ஒரு கட்சிக்கூட்டமும் மதம் மற்றும் சாதியினை அடிப்படையாகக் கொண்டு நடைபெறக்கூடாது.
  • இந்தியாவில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு படித்த மற்றும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு உருவாக்கப்பட வேண்டும்.முன்னொரு காலத்தில் இந்தியாவில் வசதியுடன் இருந்தவர்கள் மட்டுமே கல்வி கற்பதற்கும், நாட்டை ஆள்வதற்கும் தகுதி வாய்ந்தவர்களாக கருதப்பட்டனர். எளிய மக்கள் சேவகர்களாகவும், அடிமைகளாகவும் நடத்தப்பட்டனர். அதனை முன்வைத்தே ஏழை மக்களும் கல்வி கற்று அரசுப்பணியில் பணிபுரிய வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே இட ஒதுக்கீடு என்பதாகும். ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் அரசுப்பணியில் அமர்ந்த இளைஞர்களின் சாதி வாரிக் கணக்கெடுப்பு செய்து அரசுப்பணியில் குறைந்த அளவு பணியர்த்தப்பட்ட சாதியினருக்கு கூடுதலாக 2% சதவீதம் இட ஒதுக்கீடு அதிகரிக்கச் செய்ய வேண்டும்.மேலும் அதிக அளவு அரசுப்பணியில் அமர்ந்த சாதியினரின் இட ஒதுக்கீட்டிலிருந்து 2% சதவீதம் குறைக்கப்பட வேண்டும். அதாவது, அரசுப் பணிகளில் சாதியை அடிப்படையாகக் கொண்டு எந்தப் பிரிவினர் அதிகமான இடங்களைக் கொண்டுள்ளனரோ அவர்களுக்கு குறைவான இட ஒதுக்கீடும் குறைந்த அளவு இடங்களைக் கொண்டுள்ள பிரிவினருக்கு அதிகமான இட ஒதுக்கீடும் உருவாக்கப்பட வேண்டும்.
  • மேற்கூறியவாறு இட ஒதுக்கீடு செய்யப்பட்டால் இந்தியாவில் படித்த மற்றும் வேலைவாய்ப்பைப் பெற்ற இளைஞர்களின் எண்ணிக்கை "வளர்ந்து செல் விகித அளவு விதியின்" அடிப்படையில் முன்னேறிச் செல்லும். சாதியானது "குறைந்து செல் விகித அளவு விதியின்" அடிப்படையில் குறைந்து கொண்டே செல்லும்.
  • இதன்மூலமாக மட்டுமே, இந்தியா தனது அடுத்த முன்னேற்றப்பாதையினை உருவாக்கி வெற்றி கரமாக செயல்பட முடியும்.
  • இளைஞர்கள் அதிகமாக உள்ள நாடாக நமது இந்தியா திகழ்ந்தாலும், இளைஞர்களின் முன்னேற்றத்தைக் கொண்டு தான் நாட்டின் பொருளாதார வளர்ச்சி அமையும். மேலும், சாதியினையும் வேரோடு அறுத்து வெளியே அறிய முடியும். அரசியலமைப்புச் சட்ட முகவுரையில் இந்தியா ஒரு"இறையாண்மைமிக்க, சமதர்ம, சமயச் சார்பற்ற, மக்களாட்சி, குடியாட்சி " என்று எழுதப்பட்டிருந்தால் மட்டும் போதாது அதனை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையே இந்திய அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமே தவிர, ஆட்சியாளர்களே மத பிரச்சனைகளையும், உள்நாட்டு கிளர்ச்சிகளையும் ஏற்படுத்தக்கூடாது. ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்நாட்டில் உள்ள வளங்களையும் நல்ல ஆட்சியாளர்களையும் கொண்டே அமையப்பெறுகிறது. நாட்டில் ஒரு பிரச்சனைை நிலவுவதானால் அப்பிரச்சனையை தீீர்ப்பதற்கான வழிமுறைகள் எவையோ அவற்றை செயல்படுத்த வேண்டுமே தவிர அந்த பிரச்சனையை மையமாக வைத்து அரசியல் செய்யக்கூடாது


 இத்துடன் எனது கருத்துகள் நிறைவு பெறுகின்றது.

     

                நன்றி


Rate this content
Log in

More tamil story from ஆகாஷ் காமராஜ்