கருமி
கருமி


ஒரு கருமி தன்னிடம் இருந்த தங்க நாணயங்களை வீட்டில் ஒரு குழியில் புதைத்து வைத்தான்.
தினமும் அதை எடுத்து பார்த்து மீண்டும் குறிப்பு வைத்து புதைத்துவிடுவான்.
இதை தினமும் பார்த்துக் கொண்டிருந்த ஒரு திருடன் அந்த மூட்டையை திருடி விட்டான்.
மறுநாள் பணத்தைக் காணோம் என்று கருதி அலறிய போதுசுற்றி இருந்த மக்கள் பணத்தை ஏன் புதைத்து வைத்தாய்.
வீட்டிற்குள் வைத்தால் தேவையான போது அதை செலவு செய்யலாம் அல்லவா என்றார்கள்.
உடனே கருமி நானா,செலவு செய்வதா, மாட்டேன் என்றான்
உடைமை பயன்படுத்தப்படுவதால் மட்டுமே அது மதிப்புக்குரியது என்றனர் மக்கள்.