கண்ணீரைத் துடைத்துக் கொண்டே
கண்ணீரைத் துடைத்துக் கொண்டே


ஒருமுறை ஒரு பெரியவர் ஒருகுட்டிப் பையனைப் பார்த்தார்.
அந்த குட்டிப் பையன் பெரியவரிடம் சொன்னான்.
நான் சில நேரங்களில் என் ஸ்பூனை கீழே விட்டு விடுகிறேன்.
பெரியவர் நானும் தான் என்ற உடனே
சிறுவன் நான் என் பேண்டில் யூரின் போய் விடுகிறேன் என்றான்.
அவரும் நானும் தான் என்று கிசுகிசுத்தார்.
சிறுவனும் நான் அடிக்கடி அழுகிறேன் என்றான் .
முதியவரும் நானும் அப்படியே செய்கிறேன் என்று தலையசைத்தார்.
ஆனால் எல்லாவற்றிலும் மோசமானது வளர்ந்தவர்கள் என்னை
கவனிப்பது இல்லை என்று சிறுவன் கூறினான்.
உடனே பெரியவர் அந்தக் குட்டிப் பையனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு எனக்கு தெரியும்.
எனக்கும் அதே தான் நடக்கிறது என்று கூறினார் கண்களின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.