இதழ்விழியே
இதழ்விழியே
இரவின் அழகை இரச்சிப்பவர்கள் இந்த உலகில் பலப் பேர் இருந்தாலும் அதை காதல் போல அதனுடனே பயணிப்பவர்களும் இருக்கின்றனர்.....
அந்த காதல் என்பது மனிதனில் தொடங்கி இயற்கை வரை காதல் செய்து கொண்டு தான் வருகிறது.... இந்த காதல் இயற்கையை காதலிக்கும் காதலர்களை இயற்கையுடன் இணைத்து காதல் செய்கிறது.
இமைமூடாமல் இரசிக்கும் அந்த நிலவுக்கே அரசனாக இருந்தவன் தான் அவன்.பெயர் நிலவரசன் நிலவுக்கே அரசன் அவன் அப்படித் தான் இன்று வரை வாழ்ந்து வருகிறான்.
ஏனெனில் அவனுடைய காதல் அப்படி ஒரு இயற்கையுடன் பிணைந்து வந்த காதல்....
ஏனெனில் காதலை வெளிப்படுத்தும் போது நமக்கு துணை நிற்பது இந்த இயற்கையே அதில் ஒன்றான நிலா தேவதை தான் இன்று இவனுக்கு நட்புடன் உடன் இருந்தது.
இமைகளும் மூடாமல் இருக்க அடம் பிடிக்கும் அதை நிகழ்த்த வரம் வேண்டுமென கேட்க்கும்.ஏனெனில் அவளின் அழகு அது அவள் பெயர் இதழ்விழி அவள் இதழுடன் விழியை கோர்த்து வைத்திருப்பவள்.....இதழுடனே போட்டிப்போடும் விழியை வைத்திருப்பவள். அப்படிப்பட்ட அந்த விழியின் அழகை என் எழுத்தகளினால் கூட சொல்ல முடியாது
இதழ்விழி அன்று இரவு எப்பொழுதும் போல கல்லூரிக்கு சென்று விட்டு அவளுடைய ஸ்டாப்பில் இருந்து நடந்து வந்து கொண்டிருந்தாள் எப்போதும் போல அவளுடைய சிந்தனைகளை நிலவிடம் ஒப்படைத்து விட்டு இருவரும் பார்வையாலே பேசிக் கொண்டு வந்தனர்.....
அந்த நிமிடம் ஒரு பைக்கின் ஒளி அவளுடைய முகத்தில் அடிக்க யாருப்பா அது இப்படி மூஞ்சிலைய லைட்ட அடுச்சுட்டு வரது நடந்து வரது தெரியிதா இல்லையா....... அதுவும் நா ஓரமாதான வரேன்...... என்ற புலம்பலுடன் தன் கண்களை மூடிக் கொண்டும் திறந்து கொண்டும் இருந்த வேளையில்..
அந்த பைக் அவளது முன் சென்று நின்று லைட்டை ஆப் செய்தபின் அவள் கைகளால் மூடியிருந்த இருவிழிகளையும் திறந்து பார்க்கையில்...... அந்த இடத்தில் இருக்கும் வீதி லைட் வெளிச்சத்தில் அவளுடைய நிலவு போன்ற முகம் ஒளிர்வதைக்கண்ட நிலவரசன் மெய் மறந்து தான் போனான்....அந்த நிமிடம் பேச வந்த வார்த்தைகள் மனதினில் இருந்து மறைந்து போனது.
ஹலோ..... யாருங்க நீங்க எதுக்கு இப்ப ஏ பக்கத்துல வந்து வண்டிய நிறுத்தி இருக்கிங்க என்று எதிர்பார்ப்பு நிறைந்த கண்களில் சிறு அச்சமும் இல்லாமல் சினம் கொண்ட பார்வையால் அவனை பார்த்து கேட்டாள்.
எனக்கு உங்கள தெரியுங்க நீங்க கோவை ஆட்ஸ் தானே பி.எஷி பிஷிக்ஸ் (B.sc Physics) தானே நானும் அதே காலேஜ்லதா படிகிறேன்......நா உங்க சீனியர்ங்க .....என்னது நீங்க என்னோட சீனியரா நா உங்கள பாத்ததே இல்லையே என்று யோசனையில் மூழ்கியவளை நீங்க யாரையுமே பாக்கமாட்டீங்கலே இதுல என்ன மட்டும் அப்படியே பாத்துட்டாலும் என்ற நக்கலான சிரிப்பிலும் அவளுடைய பதிலுக்காக ஏங்கும் எதிர்பார்த்த கண்களுடன் அவளை பார்த்து சொன்னான்....
சரி அதுக்கு இப்ப என்னங்க....... என்ற சலிப்பான பதிலையே அவனுக்கு கொடுத்தாள்...
அந்த நிமிடம் அவன் அவள் சொல்வதை காதலே கேட்காதவாறு அவளையே கடைக்கண் பார்வையிலே தாக்கினான் ஆனால் அவளுக்கு அது புரிகிறதா இல்லையா என்ற ஏக்கம் அவனுடைய மனதில் இருந்தாலும் வார்த்தைகளால் சொல்லாமல் பார்வையால் சொல்ல முற்பட்டவன் தோற்றேதான் போனான்......
இதழ்விழி ஐ லவ் யூ என்ற வார்த்தை அவனுடைய இதயத்தில் இருந்து காற்றோடு கலந்து வாயின் வழியாக வந்த வார்த்தையை சிறு பயத்துடனும் சில எதிர்பார்ப்புகளுடனும் கூறினான்.....
எந்தவித உணர்வும் இல்லாத இதயமற்றவளாய் இல்ல சீனியர் எனக்கு இந்த காதல் எல்லாம் சரிப்பட்டு வராது என்ற பதில் மட்டும் வரவே கூடாது என்ற எண்ணம் மட்டும் அவனுடைய மூளைக்குள்ளும் மனதிற்க்குள்ளும் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது அவனுள்.....
அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் எந்த வித எதிர் வினையும் காட்டாமல் அவனிடம் இருந்து விலகவே முற்ப்பட்டாள்....
அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்ற எண்ணம் மட்டுமே அவனுக்கு உடல் முழுக்க பரவிய வண்ணம் இருந்தது. அந்த பதிலுக்காகத்தானே இவ்வளவு நாட்களாக காத்துக்கொண்டு இருந்தேன் என்ற ஏக்கமும் ஏம்மாற்றமும் மட்டுமே அவனுடைய கண்களில் தோன்றி மறைந்தது......
அவள் முற்ப்பட்ட நேரம் அவள் கைகளை பற்றிக் கொள்ள துடித்த அவன் கைகள் ஏதோ சிறு தயக்கத்தால் முயன்ற கைகள் தானாக கீழே இறங்கியது....
மனம் மட்டும் ஏக்கத்தில் மூழ்கி கொண்டு இருந்த வேளையில் எதையும் பேசாத உதடுகள் அவளை போகவிடு போகட்டும் என்ற வார்த்தையை சொல்வதைப் போல இருந்தது..
அவள் பதில் சொல்லாமல் சென்றாலும் ஏதோ ஒரு அச்சத்தில் மனப்போராட்டம் இருந்தாலும் அதனுடன் மன நிறைவும் கொஞ்சம் இருந்தது... ஏனெனில் அவள் என்னை வேண்டாம் என்று நிராகரித்து செல்லவில்லை இந்த நிமிடம் மட்டுமே என்னிடம் இருந்து விலகி செல்கிறாள்.......
என்ற எண்ணம் அவனுடைய மனதில் தோன்றியதால் அவன் அவள் செல்லும் வழியை பார்த்து நின்றான்......
அவளிடம் மனம் திறந்து சொன்ன வார்த்தையையும் அவளுடைய நினைவுடனும் அந்த இரவு நேரத்தில் நிலவின் துணையோடு அவளுக்காகவும் அவளுடைய பதிலுக்காகவும் எதிர்பார்த்த வண்ணம் அந்த இடத்திலே அடுத்த நாளும் வந்து நின்றான்.....மிகுந்த ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும்......
உங்கள்
