சந்தோஷம்
சந்தோஷம்


ஒரு ஊரில் ஒரு விடாக்கண்டன், கொடாக்கண்டன் என்று இருவர் வசித்து வந்தார்கள். கொடாக்கண்டன் தந்தைக்கு வயதாகி கொண்டுவந்தது. எனவே தன் மகன் தனக்குப் பின்னால் தன் குடும்பப் பெயரை காப்பாற்றுவான் என்ற சந்தேகம் எழும்பியது.
மகனை பரிசோதிக்க விரும்பினார் தந்தை. ஒரு நாள் மகன் தூரிகை வைத்து கொண்டு ஏதோ செய்து கொண்டு இருந்தான்.தந்தை என்ன செய்கிறாய் என்று மகனிடம் கேட்டபோது நான் படம் வரைந்து கொண்டு இருக்கிறேன் தந்தையே என்றான் பவ்யமாக.
தந்தையும் வெளியே சென்று விட்டார்கள். சிறுது நேரம் கழித்து வெளியே சென்ற தந்தை வீட்டிற்கு திரும்பினார். அப்போதும் மகன் காகிதத்தில் படம் போட்டுக் கொண்டு இருந்தான். கிட்ட வந்துசற்று அருகில் வந்து உற்றுநோக்கிய தந்தை என்ன செய்கிறாய் என்றால் நான் பசு புல்லை மேயும் காட்சியை வரைகிறேன் என்றான்.
தந்தை அந்த காகிதத்தை வாங்கிப் பார்த்து இதில் ஒன்றுமே இல்லையே என்று கேட்டார். அதற்கு மகன் சொன்னான் புல்லைத் தின்று விட்ட பசு அங்கேயே நின்று கொண்டிருக்குமா வேறு இடத்திற்கு மேய்ச்சலுக்குச் சென்று விடாதா?என்றான்.
உடனே தந்தை பசு சென்று விட்டது. பிறகு புல், பசுமையான தாவரம் எங்கே? என்று கேட்டார். அதற்கு அந்த மகன் பசு தான் எல்லாத்தையும் மேய்ந்து சென்று விட்டதே? பிறகு எப்படி அங்கே இருக்கும் என்றான் சாமர்த்தியமாக. தந்தைக்கு ஒரே சந்தோஷம்.