சேமிப்பே வாழ்வில் செழிப்பு தரும்
சேமிப்பே வாழ்வில் செழிப்பு தரும்

1 min

423
அலுவலகத்துக்கு செல்லும் ஒவ்வொரு நாளும், காலை வேலையில் எனது வாகனத்தை சுத்தம் செய்து விட்டு அதன் பிறகு புறப்படுவதற்கு முன் மனைவிக்கும் மகனுக்கும் சிறு தொகையை அவர்களின் செலவுக்கு கொடுப்பது என் வழக்கம். அப்படி நான் தரும் பணத்தை அவர்கள் எனக்கே தெரியாமல் அவர்களின் சேமிப்பு கணக்கில் சேமித்து வைத்து, எனக்கு அளிக்கும் பிறந்தநாள் பரிசு சொல்லும் செய்தி “சிறு சேமிப்பு” என்பது நம் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் நம் வாழ்வில் நமக்கு பல மகிழ்ச்சியான தருணங்களை எப்போதும் பரிசளிக்க காத்திருக்கிறது என்பதாகும். ஆதலால் “சேமிப்பு ஒன்றை வைத்துகொள், கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்”.