Akshaya Rishab

Others

5  

Akshaya Rishab

Others

அமுதமெனும் வார்த்தைகள்.

அமுதமெனும் வார்த்தைகள்.

5 mins
484


 ‌‌     

          குட்டி கதையாக ✍️           யோவ் .........! எவ்வளவு நேரம்யா ஆகும் .சீக்கிரம் இதை முடிச்சிவிடு என ஆம்புலன்ஸ் டிரைவர் உரக்க கத்தினான் அந்த சுடுகாட்டில் பிணங்களை அடக்கம் செய்பவரிடம் ! இப்பொழுது.

                தான் கொண்டு வந்து இறக்கிய அனாதை பிணத்தையும் வெரசாக எடுக்கச்சொல்லி சத்தம்போட்டு ஒருவிதமான எரிச்சலுடன் மரியாதை கூட கொடுக்காது அறுவெருப்புடன் அவரை அழைத்தான் இவ்விடத்தில் நிற்க பிடிக்காது .

              போஸ்ட் மார்ட்டம் செய்து ஒருவாரம் ஆகிய நிலையில் 'புழு பூச்சிகள் மேய்ந்து துர்நாற்றம் வீசிய அனாதையான ஒரு பிணத்தை' சிறிதும் முகம் சுளிக்காமல் வயதின் காரணமாய் நடுங்கிய கைகளுடன் ஒற்றை மனிதராய் தூக்கி புதைகுழியில் பொருமையாக வைத்து மண்ணை மூடினார் ......

              எழுபது வயதை தாண்டிய மனிதர் முகமெல்லாம் கருத்துப்போன நிலையில் சுருக்கம் தாங்கிய நெற்றி அவரின் உழைப்பை எடுத்துக்காட்டியது. எப்பொழுதும் சுடுகாட்டில் இருப்பதால் உடம்பில் ஒட்டிக்கொண்டது துர்வாசனை .........! முடியெல்லாம் நரைத்துப்போய் காணப்பட்டார் நாச்சியப்பன் .

                   கொஞ்சம் பொருப்பா ! வரேன் என்கிற குரலோடு அத்தனை சுருசுருப்பாக ஆம்புலன்ஸ் அருகே வந்தவர் டிரைவரிடம் ' தூக்குப்பா ' என சொல்லி நெருங்கியவரிடம் .

                 யோவ் ....யோவ் ....

கொஞ்சம் தூரமா நின்னே பேசு நாத்தம் குடலை பிரட்டிட்டு வருது ! இன்னும் கொஞ்சம் நேரம் உன்கூட பேசுனா நானும் மேல போகவேண்டியது தான் . இந்த அனாதை பொணத்தையும் இறக்கி போட்டுட்டு போறேன் எப்படியோ புதை இல்ல என்னமோ பன்னு என்று கடுகடுத்து முகம் சுளித்து பொறிந்து தள்ளியவன் வேகமாய் வண்டியில் இருந்து பிணத்தை ஸ்ட்ரக்சரில் இறக்கி வைத்து கீழே டமார் என்று போட்டுவிட்டு கப்பு சிப்பென இடத்தை காலி செய்து சென்றுவிட்டான் .

           அப்பொழுதும் அவரின் முகத்தில் எவ்வித சளனமும் இல்லாமல் போகவே மெலிதான புன்முறுவலுடன் பிணத்தை அருகில் கிடந்த ஸ்ட்ரக்சரில் தூக்கி வைத்து கைகளால் இழுத்துச்சென்றார் ........பாவம் ரொம்ப வயதாகிவிட்டதால் தோள்மீது தூக்க முடியவில்லை. அரைமணி நேரத்தில் குழி வெட்டி அதனுள் பிணத்தை வைத்து மனதில் இறைவனிடம் ' ஒவ்வொருவரின் ஆன்மாவும் சாந்தி அடையவேண்டும் ' என்று வணங்கி அவ்வேலையை செய்தார் நல்ல மனதுடன் .

               தான் வாழ்ந்த வீட்டை பெற்ற மகனை படிக்க வைக்க விற்றுவிட்டு தனக்கும் மனைவிக்கும் தினம் வயிற்று கஞ்சிக்காக இவ்வேலையை செய்கிறார் மனிதர் . பணம் வாங்காமல் செய்ய இவருக்கும் ஆசைதான் ஆனால் மீதம் இருக்க வாழ்க்கையை ஓட்ட எப்படி வாங்காது இருப்பது . அதுவும் ஊர் ஊருக்கு மின் மயானம் வந்துவிட்டதால் இங்கே சுடுகாட்டிற்கு அதிசயமாக ஏதோ ஒன்று மூன்று வரும் அதன்பிறகு அனாதை பிணங்கள் தான் அதிக வரவாக இருக்கும் .!!! கிடைத்த உணவை இங்கயே உட்கொள்வார் குமட்டிக்கொண்டு வந்தாலும் வயிற்று பசியின் காரணமாக உண்டுவிடுவார் ஐந்து நாட்களுக்கும் மேல் ஊரிய நஞ்சாக போன பழைய சாதத்தை .

          இதுவே நாச்சியப்பனின் வாழ்க்கையாகி போனது ஆனால் மனதின் ஏக்கம் " பெற்ற மகன் எப்பொழுது தன்னையும் மனைவியையும் காண வருவான் " என்று தவித்துப்போய் தவமாக உயிரை இழுத்துப்பிடித்து காத்து

இருக்கிறார் .

               இன்று ஏனோ .....உண்மையில் வாந்தி வருவது போல் இருந்தது . கையில் பத்து ருபாய் இருந்தது வெளியே சென்று கடையில் செவனப் வாங்கி குடிக்கலாம் என நினைத்து பொருமையாக சுடுகாட்டை விட்டு வெளியேறினார் . சாலையில் அத்தனை ட்ராஃபிக் .......கார்கள் ஒருபக்கம் ! பேருந்துகள் லாரிகள் மறுபக்கம் என சென்றவண்ணம் இருந்தன . இவருக்கு தலைசுற்றியது இரண்டு வேலை சாப்பிடாத காரணம் .

               கண்கள் இருட்டிக்கொண்டு வர சாலையை கடக்க முற்படும்போது வலது புறமாக வந்த காரில் மோதினார் நல்லவேளை கார் நின்றுவிட்டது ஆனால் வாந்தி நிற்குமா பாவம் மனிதர் ........அந்த காரின் முன்பக்க கண்ணாடியில் வாந்தி எடுத்துவிட்டார் வேண்டுமென்றே செய்யவில்லை முடியாத சூழ்நிலையில் .....!

                   புதிதாக வாங்கிய கார் போல ! அவ்வளவு தான் அதன் ஓனர் வெளியே இறங்கி வந்து " யோவ் .......மனுசனாய்யா நீ கொஞ்சம் கூட அறிவே இல்ல . மூஞ்சு முகறைய பாரு ச்ச உன்ன பார்த்தாவே அறுவெருப்பா இருக்கு ! நீ எல்லாம் சாகாம என்னய்யா செய்ற கருமம் பிடிச்சவனே வந்துட்டான் ‌...இதென்ன உன் அப்பன் வூட்டு ரோடா உன் இஷ்டதுக்கு பைத்தியகாரன் மாதிரி போற ! என்னோட புது கார இப்படி கேவலப்படுத்திட்டியே டா ச்ச இடியட் .....! வந்தவுடனே உன்ன மாதிரி ஆளோட முகத்துலையா முழிக்கனும் த்தூ என அவரின் முகத்தில் அனைவருக்கும் முன்பாக காரி துப்பிவிட்டு காரில் ஏறி சென்றான் வயதில் பெரியவர் என்றும் பாராமல் .

                 தன்மீது தான் தவறு என்று நினைத்தவர் அவன் துப்பிட்டு சென்ற எச்சிலை வலது கையால் துடைத்துக்கொண்டு இதழோரம் சிறு மெலிதான சிரிப்புடன் நடந்தார் மனிதர் நாச்சியப்பன் .

              அந்த கார் காரன் நேராக ஒரு குடிசை வீட்டின் முன்பாக நிறுத்துவிட்டு ........! நேராக வீட்டிற்குள் அனுமதி கூட கேட்காது நுழைந்தவன் அங்கே ஓரமாக குடிக்க வைத்திருந்த இரு குடங்களில் இருந்த நீரை அவசர அவசரமாக தூக்கி வந்து எரிச்சலுடன் காரின் முன்பகுதியில் ஊற்றினான் . இத்தனை வருடங்களுக்கு பிறகு மகன் வீட்டிற்கு வந்திருப்பதை கண்ட வயதான தாய் அவன் கோவமாக இருப்பதை பார்த்து பதட்டத்துடன் " எப்பா ராசா .......என்னாச்சுய்யா இத்தனை வருசம் கழிச்சு வீட்டுக்கு வந்ததும் வராததுமா இம்புட்டு கோவமா இருக்க ....படிபெல்லாம் முடிஞ்சுதா ராசா " என வாஞ்சையுடன் வினவினார் .

                 காரை முழுதாக குடிதண்ணீரில் வாஷ் செய்தவன் சில நிமிடங்களுக்கு பிறகு அம்மாவின் அருகே வந்து ' இங்க ‌....பாரும்மா என்னோட படிப்பு எல்லாம் முடிஞ்சிருச்சு அதுமட்டும் இல்ல நல்ல வேலையும் கைநிறைய சம்பளமும் வாங்குறேன் அதான் புதுசா கார் கூட வாங்கிட்டேன் .நீங்க என்ன பார்த்துக்கிட்டதுக்கும் படிக்கவச்சதுக்கும் மொத்தமா ஒரு அமௌண்ட கொடுத்துட்டு போகலாம் ன்னு வந்தேன் .....! நான் அங்கயே அப்பார்ட்மெண்ட் சொந்தமா வாங்கிட்டேன் ! நீங்க இங்கயே வாழ்ந்துட்டிங்க உங்களுக்கு அங்க சிரமமா இருக்கும் .........! நீயும் அப்பாவும் ஒரு கையெழுத்து போட்டு கொடுத்துட்டு பணத்தை வாங்கிக்கிட்டா போய்டுவேன் என சுடுதண்ணி காலில் ஊற்றியது போல் நின்றான் .

  

           தன் மகன் பேசுவதை கேட்ட தாய் . அவன் கேசத்தை வருடிவிட்டபடி ' ராசா ....இருப்பா நீ உன்னோட அப்பன் கிட்ட சொல்லுய்யா ......அவரு என்ன சொல்றாரோ அப்படியே பன்னிக்கலாம் ' என மனம் விட்டுபோய் இதயம் அறுந்துபோய் கூறியவர் நேராக அவனை அழைத்துச் சென்றார் தன் கணவரிடம் .

 சிலமணி நேரங்களுக்கு பிறகு ...!

         தன் கணவர் வேலைசெய்யும் இடத்திற்கு மகனை அழைத்துவந்த தாய் .....'ஏய்யா எங்க இருக்க' என்று தனது கணவரை அழைத்தார் . மகனோ அவ்விடத்தை புரியாது பார்க்கவே அவன் கண்களுக்கு நடுவே தெரிந்தது

            " அந்த சுடுகாட்டில் .....! அத்தனை புதை குழிக்கு நடுவே .....அனாதையாக படுத்து கிடந்தவரின் கண்ணில் கசிந்த நீரை ஈ-க்கள் மொய்த்துக்கொண்டிருக்க ! காய்ந்து வரண்டு போய் பார்க்க சகிக்காத உதடுகளின் மீது கருப்புநிற கட்ட எரும்புகள் அரிக்க ! உடம்பில் உயிர் அற்று கிடந்தார் நாச்சியப்பன் ."

                ஏய்யா .........என தன் கணவரை பார்த்து வீச்சென்று கத்தியவர் தட்டுத்தடுமாறி விழுந்தடித்து ஓடிச்சென்று ' அவரை தன் மடியில் கிடத்தி ஐயோ கடவுளே .........ஏய்யா என்னை விட்டுட்டு போன நான் என்ன பன்னுவேன் .....என மாரில் அடித்து கதறியவர் எதிரே சிலையாகி போய் நின்ற மகனிடம் ' எப்பா ராசா ......வந்து கடைசியா உன் அப்பனோட முகத்தை பாருய்யா ' என்று வாஞ்சையுடன் அழைத்தார் அந்த தாய் .

               பெற்ற அப்பாவை அடையாளம் காணமுடியாது திட்டியதே மீண்டும் மீண்டும் தனது செவிகளில் ஒலிக்க ...........கையில் பிடித்திருந்த பெட்டியை கீழே தவறவிட்டான் மகன் தன்னை வளர்த்து ஆளாக்கிய அப்பாவின் உயிர் போன உடம்பை கண்டு .... கீழே விழுந்து திறந்து கொண்ட பெட்டியில் இருந்து பணகாகித நோட்டுகள் பறந்தன .....!

      அழுகிபோன பிணங்களை தூக்கும் போது

     அழுகை வரவில்லை.!

  பிணங்களின் குவியல்களுக்கு

மத்தியில் உணவு உட்கொள்ளும் போது .....

        அழுகை வரவில்லை !

          சுடுகாட்டில் வீசும் துர்நாற்றத்தால் அழுகை வரலையே அதனையும் வாசனையாக சுவாசித்தேனே ....!

     கஷ்டத்திலும் அழுகை வரவில்லை ! ஆனால்

 இன்றோ ....! தான் பெற்ற மகன்

       தகப்பனை அடையாளம் காணமுடியாது

    "நீயெல்லாம் சாகாமல் என்ன செய்கிறாய் ...கருமம் பிடித்தவனே"

      ஆளும் முகறையம் பாரு ...அருவெறுப்பு என்றானே !!

   மனம் துடித்தது கனத்தது !

 கண்ணீர் பெருக்கெடுத்தது !

பிணங்கள் மனிதர்களாய் நானும் 

             கலந்துவிட்டேன் !

அனைவரையும் அடக்கம் செய்த இந்த கருமம் பிடித்தவனை !

        யார் அடக்கம் செய்வார்கள் என்ற கேள்வியோடு எனது உயிர் பிரிந்தது !!!!!!!!!

            பெற்ற மகனின் அமுதமெனும் வார்த்தைகளால் ? .

             நீ பிறக்கும் போது கருப்போ சிவப்போ ! கூனோ குருடோ ! நெட்டையோ குட்டையோ ! அசிங்கமோ லட்சனமோ எப்படி இருந்தாலும் எந்த நிலையில் இருந்தாலும் வெறுக்காமல் பாசமாக அரவனைத்து உண்மையான அன்போடு ஏற்றுக்கொள்பவர்கள் தாய் தந்தை மட்டுமே .

           பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையும் ....!

         பாதி வாழ்க்கையை சுமந்து தன்னை வளர்த்து ஆளாக்கிய தந்தையையும் .....!

    தவிக்க விடும் மகளோ மகனோ இவ்வுலகில் வாழ

எந்தவித தகுதியும் அற்றவர்கள் ஆவார்கள் .

                 ✍️✍️ சுபம் ✍️✍️

    



Rate this content
Log in