STORYMIRROR

Shalini 14

Others

3  

Shalini 14

Others

அம்மா!

அம்மா!

1 min
62

       அம்மா என்றாலே அன்பு, அக்கறை, பாசம், தியாகம், ஆறுதல், அரவனைப்பு, அதட்டல், கண்டிப்பு.....இவை எல்லாம் சேர்ந்ததுதான் அம்மா. 


     கருவில் உருவானது முதல் நம்மை இவ்வுலகிற்கு அறிமுகம் செய்யும் வரை அக்கறையுடன் கலையாமல் காப்பாள்.


      பின்பு வளர்ந்து சோறு உண்ணும் போது அனைத்தும் தன் பிள்ளைக்கு வேண்டும் என்று தான் உண்ணாதிருப்பாள். எப்போதாவது உணவு இருந்தாலும் சூடு ஆறிய உணவையே உண்பாள்.


    பின்பு பள்ளி கல்லூரி வரை தான் படிக்கவில்லை என்றாலும் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று உடல் நோக மாடாய் உழைப்பாள்.

      

    வேலைக்கு பிள்ளைகள் சென்றாலும் தானும் உழைத்து முன்னேற்ற நினைப்பாள்.


      இப்படியாய் ஒரு தாய் தன் வாழ் நாள் முழுதும் பிள்ளைகளுக்காகவே வாழ்ந்து மடிகிறாள்.


      அனைவரும் கடவுளை தேடி கோவிலுக்கு செல்கின்றனர், ஆனால் கடவுளே வீட்டில் இருக்கிறது அம்மாவாக.


      அம்மா என்ற உறவு இல்லையேல் அனைவரும் அனாதை தான். 

   

       


Rate this content
Log in

More tamil story from Shalini 14